இல்லறம்

தைராய்டை கட்டுப்படுத்தும் தினை முறுக்கு

 

தேவையனவை

தினை அரிசி மாவு – ½ கிலோ
கடலை மாவு – ¼ கிலோ
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
எள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

தினை அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் நன்கு சலித்துக் கொண்டு அதனுடன் சீரகம், எள், மிளகாய்த்தூள், உப்பு, 50 மி.லி. எண்ணெய், மிதமான சுடுநீர் போன்ற்றை மாவில் ஊற்றி சரியான பதத்தில் பிசைந்து கொள்ளவும். பின் முறுக்கு அச்சில் மாவைப் போட்டு முறுக்கை சூடான எண்ணெயில் பிழிந்து இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். தினையை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வாத நோயைப் போக்கும். பசியின்மையை நிக்கும். சளி, இருமல்நோய்கள் இல்லாமல் செய்யும். இடுப்பு வலி, மூட்டுவலியைக் கட்டுப்படுத்தும். தைராய்டு பிரச்சனைகளைச் சரியாக்கும்.

Comment here