Sliderவரலாறு

தொடரும் இன்காவின் தங்க வேட்டை !!

 

நூற்றுக்கணக்கான டன்கள் எடையுள்ள புதையல் தங்கத்தைத் தேடி நெடுநாட்களாக நடைபெறும் ஒரு தொடர் ஆய்வை ப்பற்றி அறிவீர்களா ?

நமது நாட்டின் திருவனந்த புரம் பத்மநாபர் கோவில் பற்றியது அல்ல அது தென்னமஇன்கா ரிக்காவின் இன்கா நாகரீகத்தின் அளவிடமுடியாத தங்கப்புதையலைப்பற்றிய வரலாறு .

இன்கா நாகரிகம்என்பது தென்னமெரிக்காவில் நிலவிய குறிப்பிடத்தக்க தொல் நாகரிகமாகும். அது வீழ்ச்சியடைந்த போது உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாக இன்கா பேரரசு விளங்கியது . பெருவின் உயர்நிலப்பகுதிகளில்கி. பி. 1200 ஆம் ஆண்டளவில் இந்த நாகரீகம் தோன்றியது. 1533 வரையான காலப்பகுதியில் போர்கள் மூலமும் சமாதான வழிமுறைகளாலும் மேற்குத் தென்னமெரிக்காவின் பெரும்பகுதியை, குறிப்பாக இன்றைய ஈக்குவடோர், பெரு, பொலிவியா, ஆர்ஜென்டீனா போன்றவற்றை உள்ளடக்கி இன்காப் பேரரசாக வளர்ந்ததுஇதன் தோற்றம் குறித்து தென்னமெரிக்க சோழர்கள் என்று ஒரு ஆய்வுபுத்தகமாக சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மனோகரன் என்பவரால்
வெளியிடப்பட்டிருந்தது .அது தனி ஆய்வு .இப்போது காணப்போவது அந்த நாகரீகத்தின் வரலாறு .அல்ல , அந்த நாகரீகத்தின் கடைசி பகுதியில் நிகழ்ந்த சோக நிகழ்வுகள் ஆகும் ..1533 இல் அடஹுஅல்பா
(Atahualpa )என்ற கடைசி இன்காப் பேரரசர் வஞ்சகமாக கொலை செய்யப்பட்டதோடு ஸ்பானிய ஆட்சி தொடங்கியது. 1572 இல் கடைசி இன்கா ஆட்சியாளரும் கொல்லப்படதோடு இன்கா அரசு முழுமையாக இல்லாதொழிந்தது.வெறும் 177 வீரர்களுடன் மட்டுமே வந்த ஸ்பானிஷ் தளபதி பிசாரோ இன்காவின் அடஹுஅல்பா என்ற இன்கா மன்னரை வஞ்சகமாக கொடூரமாகக் கொன்றான். மன்னன் தெய்வாம்சம் பொருந்தியவன், அவனையே கொன்று விட்டார்கள் என கருதியதால் மக்கள் கிளர்ந்தெழவில்லை. அதன் விளைவாக 433 ஆண்டுகள் சாயாதிருந்த இன்கா பேரரசின் முடி சாய்ந்தது
1532 இல் ஸ்பானிஷ் சிறிய படையின் தளபதி பிசரியோ தனது 177 பேர் கொண்ட மிகத் சிறியப்படையுடன் இக்காவின் பக்கம் வருகிறார் அதன் செலவச் செழிப்பும் ,மக்களின் சீரிய வாழ்க்கையும் அவரின் பேராசையு ம் பொல்லாத குணத்தைத் தூண்டிவிடுகிறது .அவர் ஒரு மிகப்பெரிய வஞ்சக முயற்சி ஒன்றை மேற்கொள்ள திட்டமிடுகிறார் .அங்கிருந்த பிரம்மாண்டமான கற்சிலைகளையும்,கட்டிடங்களும் கொட்டிக் கிடக்கும் தங்கக் குவியலையும் பார்த்து வாயைப் பிளந்தான் அந்தக் கொள்ளைக்காரன். அவர்களும் தமிழர்களைப் போலவே இளிச்சவாயர்கள். ஸ்பானிய கும்பலை நம்பி மோசம் போனார்கள்.அப்போது இன்கா பேராசை ஆண்டவர்
அடஹுஅல்பா எனும் பண்பாளர் அந்தக்காலகட்டத்தில் அவருக்கும் அவரது ஒன்று விட்ட சகோதரருக்கும் ஆட்சி உரிமை சம்பந்தமாக ஒரு சச்சரவு இருந்து வந்தது .அதனால் அவர் அங்கும் இங்கும் தெரிந்து கொண்டு இருந்தார் .அப்போது அவரின் படையில் இரண்டு லக்ஷம் போர்வீரர்கள் இருந்தார்கள் .இன்கா படை என்பது இன்கா பேரரசினைக் காக்கவும், அதன் எல்லையை விரிவுபடுத்தவும், எதிரிகளைக் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ஒரு பல் இனப் படையாகும். இன்கா பேரரசு வளர்ந்ததைப் போலவே அதன் படைபலமும் அதிகரித்தது. இன்கா பேரரசு அதன் உச்சத்தில் இருந்த போது இன்கா படையில் 2 இலட்சம் பேர் இருந்தனர்.
இன்கா படையினர் தாங்கள் சார்ந்திருந்த இனத்திற்கேற்ப வெவ்வேறு வகையான எளிய ஆயுதங்களைக் கையாண்டனர்.
பாதுகாப்புதலைக்கவசம்
மார்புக்கவசம்
ஆயுதங்கள்
கோடாரிகள்
ஈட்டிகள்
போலா எனப்படும் நுனியில் கற்களைக் கொண்ட கயிறு
கவண்வில்ஆனால் துப்பாக்கி எனும் ஆயுதம் அவர்கள் அறியாதது .
சிறியப்படையுடன் ஊசுற்றிப்பார்க்கவந்த ஸ்பானிஷ் தளபதி ,பிசாரோ அப்போதைய இன்கா மன்னரைப்பார்க்க அனுமதிக்கேட்டார் .மன்னர் அடஹுஅல்பா முதலில் அவரது பிரபுக்களின் சிலரை அனுப்பி அவர்களைப்பற்றி அறிந்தார் அவர்கள் மிகச் சிறிய 170 வீரர்களுடன் இருப்பதை அறிந்த மன்னர் அவர்களின் அழைப்பை ஏற்றார் .தனது சொந்த படையான 80,000 வேர்களில் இருந்து 6000 வேர்களை மட்டும் அழைத்து கொண்டு அவரது நாட்டுக்கு வந்த வித்தியாசமான வெள்ளை விருந்தினரை சந்திக்க வெள்ளை மனதுடன் சென்றார் .அவரை பல்லக்கில் போர்வீரர்கள் சுமந்து சென்றனர் .போகும் வழியெங்கும் விருந்தும் கேளிக்கையும் ,மது விருந்துடன் சென்றார் .அவர் சென்றதுவேஎறிந்தினரை சந்திக்கத்தானே ?ஆனந்தமாக சென்றார் .
ஸ்பானிஷ் வீர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்றனர் .அங்கே வீர்கள் யாரும் தென்படவில்லை .வெள்ளை மனதுடன் நம்பிக்கைக்கொண்டு அந்த தளபதியின் அழைப்பை நம்பி கட்டிடம் ஒன்றில் சிலருடன் சென்றார் .அப்போது ஒளிந்திருந்த வீர்களின் துப்பாக்கி முழங்கத்தொடங்கியது .அது வரை துப்பாக்கியை அறியாதவர்கள் திகைத்துப்போயினர் .பாதுகாப்புக்கு உடன்வந்த வீர்களைக்கொன்று மன்னர் அடஹுஅல்பாவை கைதியாகப்பிடித்தனர் .
பின்பு வெளியில் காத்திருந்த 6000 வீரர்களும் அழைக்கப்பட்டனர் .மன்னர் கைதானதும் வீரர்களும் கதிகலங்கிப்போனார்கள் .பல்லக்கில் வந்த மன்னர் வஞ்சகமாக ஸ்பானிஷ் தளபதியின் கைதி ஆனார் .
அப்போது மன்னர் அடஹுஅல்பாதன்னை அப்போது கொல்லாமல் விட்டால் அவர் அப்போது இருந்த அந்த பெரியக்கூடத்தின் நிறைய தங்கத்தைத்தருவதாக வாக்களித்தார் .பேராசை கொண்ட தளபதிஅதற்க்கு ஒப்புக்கொண்டனர் .அந்தக்கூடம் இரண்டு மாதங்களுக்குள் தங்கத்தாலும் அதன் அளவில் இருபங்கு வெள்ளியால் நிரப்பப்படவேண்டும் என்று நிபந்தனை விதித்தனர் .இன்காவின் தங்கம் தினசரி அங்கே வந்து குவிய ஆரபித்தது .தினசரி வந்து குவிந்த தாகத்தின் அளவைக்கண்டு திகைத்துப்போயினர் .அவை எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது இன்னமும் எவ்வளவு தங்கம் அந்த நாட்டில் இருக்கிறது என்பதை அறிய ஆவல் கொண்டனர் .இதை அறிய மன்னரை வதை செய்ய ஆரபித்தனர் .இதில் எதிர்பாராத விதமாக மன்னர் அடஹுஅல்பா கொல்லப்பட்டார் .இந்த தங்கத்தை கொண்டுவருவதில் முக்கிய பங்கேற்ற இன்காவின் தளபதிRumiñahui அவர் பெருமளவு தங்கசுமையுடன் கூடத்தை நிரப்ப போதுமானத்தங்கத்தை கொண்டு வந்தவர்தளபதி வரும் வழியிலேயே மன்னர் கொல்லப்பட்டதை அறிந்து கோபம் கொண்டார் .உடன் கொண்டுவந்த தங்கம் அனைத்தையும் அங்கிருந்த மலைப்பகுதிக்குகையில் ஒளி த்து வைத்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார் .
இது நடந்தது July 26, 1533, இல் இது நடைப்பெற்ற இடம் Cajamarca

அதுவரை ஸ்பானிஷ் வீரர்களுக்கு தரப்பட்ட தங்கத்தை அரைப்பகுதி கூடம் நிறைய தங்கம் அப்போது அந்த கொள்ளையில் பங்கேற்ற 170 பெரும் பிரித்துக்கொண்டதாக வரலாறு கூறுகிறது .அதுமட்டும்
13,000 பவுண்டுகள் எதைக்கொண்டு தங்கமும் அதன் இருபங்கு எடைகொண்ட வெள்ளியும் ஆகும் .ஆனால் அறிய வேலைப்பாடு கொண்ட தக நகைகள் ஆயிரம் ஆண்டுகள் நாகரீகத்தின் சான்றாக தங்க வேலைப்பாடுகள் கொண்ட அத்தனையும் உருக்கப்பட்டன .கொள்ளையர்களால் பங்கிட்டுக்கொள்ளப்பட்டது
தென் அமெரிக்காவில் ஸ்பானியர்கள் தங்கம், வெள்ளி அள்ளிச் செல்வதைப் பற்றி கேள்விபட்ட ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்களும் அவற்றை வழிப்பறி செய்தனர். ஒல்லாந்து, ஆங்கில கடற்கொள்ளையர்கள் ஸ்பானிய கப்பல்களை வழிப்பறி செய்து தமது தாயகத்திற்கு கொண்டு சென்றனர். 1628 ம் ஆண்டு, Piet Hein என்ற ஒல்லாந்து கடற் கொள்ளைக்காரன் அபகரித்த செல்வம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. கியூப கடலோரம் வழிப்பறி செய்யப்பட்டு ஒல்லாந்து கொண்டுவரப்பட்ட கப்பலில், 177000 கிலோ வெள்ளி, 66 கிலோ தங்கம், 1000 முத்துக்கள் இருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட சரக்கின் மொத்த பெறுமதி எட்டு மில்லியன் யூரோக்கள்.
.இன்கா நாகரீக மக்கள் கயிற்றில் முடிச்சுகளைப் போட்டு கணக்கு எழுதினர். முடிச்சுகள் மூலம் வேறு பல விஷயங்களையும் பதிவு செய்தனர். இது பற்றிய புதிய கண்டு பிடிப்புகள் புகழ்பெற்ற விஞ்ஞான சஞ்சிகை நியூ ஸைன்டிஸ்டில் (NEW SCIENTIST) வெளியாகியுள்ளது.
எழுதிய காகிதங்கள் எதையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை என்பது உண்மையே. ஆயினும் அவர்கள் வித விதமான முடிச்சுகள் உள்ள வண்ண, வண்ண கயிறுகளை விட்டுச் சென்றுள்ளனர். இதை கீ பூ (KHIPU) என்று அழைப்பர். இதில் சீன அபெக்கஸ் (ABACUS) (கணக்கீட்டுப் பலகை) போல கணக்கு வழக்குகளை எழுதியது முன்னரே தெரியும். ஒருவேளை இந்த கயிற்று முடிச்சுகள் பழங்கால கதைகளையும் சொல்லுமோ என்ற சம்சயம் ஆராய்ச்சியாளர் இடையே எழுந்தது. அதை மேலும் ஆராய, ஆராய இவை வெறும் முடிச்சுகள் அல்ல– கதை சொல்லும் முடிச்சுகள்– பாடல் பாடும் முடிச்சுகள்– என்பது தெரிய வந்தது. அதனால்தான் நியூ ஸைண்டிஸ்ட் போன்ற புகழ் மிகு அறிவியல் வார இதழும் கூட 5 பக்கக் கட்டுரையை படங்கள் சஹிதம் வெளியிட்டது..இன்கா இளவரசிக்கும் ஸ்பெயின் நாட்டு ஆக்ரமிப்பாளனுக்கும் பிறந்த கவிஞர் கார்ஸிலாஸோ டெ லா வேகா 1609-ம் ஆண்டில் முடிச்சு மொழியின் மூலம் அவர்கள் என்ன என்ன எழுதினர் என்று விளக்கியிருந்தார். அவர் ஒரு துப்புத் தகவல் கொடுத்திருந்தார். இன்காக்கள் கயிற்றில் போடும் முடிச்சு மூலம், அவர்கள் போட்ட சண்டைகள், வாதப் பிரதிவாதங்கள், சம்பாஷணைகள், வரி விதிப்பு வசூல், நிலுவை விவரம், யார் யார் வந்து மன்னர்களைப் பார்த்தனர் என்றும் எழுதிவைத்ததாக 400 ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தார். முடிச்சுகளில் எண்களைக் காண்பது எளிதாக இருந்தது. ஆனால் வரலாற்றைக் காண்பது இதுவரை புதிராக இருந்தது.
ஆனால் மரீஇத்டு வைக்கப்பட்ட புதையலின் ரகசியம் இன்னமும் வெளிவரவில்லை .
அவைகளை அடுத்தப்பகுதியில் கூறுகிறேன் .மிகவும் நீண்டுவிட்டது .இதற்காக இன்காவின் வரலாற்றைப்படிக்க ஆரபித்த நான் , கொட்டிக்கிடக்கும் தகவல்களில் மிகச் சிறிய அளவே மிகவும் சுருக்கமாகக்கூறியிருக்கிறேன் .இப்போதே சோகம் மனதை சூழ்ந்து விட்டது .எப்படி இருந்தவர்கள் எப்படி அழிக்கப்பட்டார்கள் ? இது வித்தியா ?
இப்படித்தான் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட பிலிப்பைனும் ,தனது மிகப்பெரிய தக செல்வத்தையும் நெடிய வரலாற்றையும் மறந்து போன சோகத்தை முன்பு எழுதி இருந்தேன் .இனமும் விரிவாக எழுதுகிறேன்
                                                                                                                                 #அண்ணாமலைசுகுமாரன் .

Comment here