தொல் தமிழரின் பானை கழிவறைகள்

5 (100%) 1 vote

 

தமிழகத்தில் பொதுவில் மலம் கழிக்கும்அநாகரீக வழக்கம் பெருவாரியாக இருக்கிறதுஎன்று நம் மேல் ஒரு பழி உண்டு தமிழ் நாட்டில் முன்பு தனிக் கழிப்பறைகள்மலம் கழிக்க உபயோகிக்கும் வழக்கம் இருந்ததில்லை என்று பொதுவாகக்கருதப்படுகிறது .ஆனால் உண்மை முற்றிலும் வேறானது .தொல் தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் அண்மையில் கிடைத்து வரும் சான்றுகள் மற்றும் செய்திகள் அவைகளை பொய்யாக்கி வருகின்றன .ஆனால் இத்தகைய செய்திகள் இன்னமும் நம்மிடையே பிரபலம் ஆகாதுதான் வேதனை .

கேரளாவில் உள்ள முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்ற பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல்துறை நிபுணர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் கழிவறைகள் கட்டி, பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிவந்துள்ளனர்.
சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பட்டினம் பகுதியின் வரலாறு, அங்கு தொல்லியல் ஆய்வில் கிடைத்த பல்வேறு பொருட்களின் விவரங்களை ‘பாமா'(PAMA) என்ற தனியார் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் செரியன் விளக்கமாக எடுத்துரைத்தார்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், தமிழகம் என்பது பரந்துவிரிந்து, இன்றுள்ள தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக இருந்திருக்கும்
. அதில் பட்டினம் நகரம் முக்கியமான துறைமுகமாக இருந்தது. இங்கு கழிவறைகள் இருந்ததற்கான சான்றாக கழிவுப் பானைகள் கிடைத்துள்ளன,”என்கிறார் பட்டினம் பகுதியில் ஆய்வு நடத்தும் தொல்லியல் ஆய்வாளர் செரியன்.

‘ஆறு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, கடைசியாக வைக்கப்பட்ட பானை கூம்பு வடிவில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. இந்த கழிவறை வெஸ்டர்ன் டாய்லெட் என்று அறியப்படும் கழிவறையை ஒத்திருந்தது. இதே அமைப்பில் ஆறு கழிவறைகளை இதே இடத்தில் கண்டறிந்தோம்,”என்று விளக்கினார் செரியன்.

இதுவரை இங்கு நடக்கும் அகழாய்வில் தோண்டும் இடமெல்லாம் பானை ஓடுகளும் அ
தில் எழுத்துக்களையும் கண்டு வந்திருக்கிறோம்
ஆனால்பானைகளின் மற்றொரு நவீன் உபயோகமும் இப்போது தெரிய வந்திருக்கிறது .நம்முடைய நாகரீகத்தை பானை நாகரீகம் என்றே அழைக்கலாம் , பானை வழித்தடம் என்று பட்டு வழிப்போல சிறப்பித்துக்கூறுகிறார் சிறந்த ஆய்வாளர் ஆன
ஆர் பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் அவர்கள் இப்போது பானைகளைப்பற்றி
இன்னமும் செய்திகள் கிடைத்துவருகிறது

2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் பாமா நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது ”பட்டினம் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவு பானை ஓடுகள் கிடைத்தன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்ததுதள்ளது .மிளகு கிடைத்திருப்பது முக்கிய செய்தி ஆகும் .இன்னமும் பல முக்கிய செய்திகள் அந்த அகழ்வாய்வில் வெளிவந்துள்ளது .இந்த செய்தி
https://www.bbc.com/tamil/india-46053711 இல் வெளிவந்துள்ளது விரிவான பல செய்திகளை அதில் காணலாம் .எப்படியெல்லாம் பீடுடன் வாழ்த்திருக்கிறோம் இப்போது எத்தனை அவப்பெயரை சுமந்து நிற்கிறோம் ! உலகின் தலை சிறந்த நகர நாகரீகம் கொண்டவர்களாக நாம் இருந்திருக்கிறோம் .இப்போது சொல்வார் இல்லாமல் வாடி நிற்கிறோம் !

Annamalai Sugumaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*