பொது

தொழில் – கல்வித்துறை புதிய முயற்சி கருத்தரங்கம்

Rate this post

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர மையம் மூலம் தொழில்-கல்வித்துறை புதிய முயற்சி பற்றிய கருத்தரங்கம் மார்ச் 9ஆம் தேதி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், தொழில்துறை வல்லுநர்கள், வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலர்கள் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டனர். ‘தொழில்துறையும் கல்வித்துறையும் இணைந்தால் இவ்வுலகில் மாற்றம் உண்டாகும்” என்று டாக்டர் கே.ஆர்.சுந்தரவரதராஜன், இயக்குனர், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் இயக்குனரகம் வரவேற்புரையில் கூறினார்.

மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்(பொ) டாக்டர். M. ரவிச்சந்திரன் சிறப்புரை வழங்கி பேசுகையில் மாணவர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், வருகின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு வாழ்வில் மென்மேலும் உயரவேண்டும் என்று அறிவுறுத்தினார். சிறப்பு விருந்தினாரான நாக சிவானந்த் (சாகர் கல்வி குழுமம், ஐதராபாத்) பேசுகையில், மாணவர்களிடம் வரும் தலைமுறைகளில் நல்ல மாற்றம் உண்டாக வேண்டும் என்று கூறினார். கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் துனை இயக்குனர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர் கூறுகையில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை, அவர்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்றார். கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.

மேலும் விபரங்களுக்கு: டாக்டர; கே.ஆர்.சுந்தரவரதராஜன், இயக்குனர், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் இயக்குனரகம், 9443090221
புகைப்பட விபரம் : டாக்டர கே.ஆர்;.சுந்தரவரதராஜன், இயக்குனர், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் இயக்குனரகம், பல்கலைக்கழக பதிவாளர்(பொ) டாக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு விருந்தினர் நாக சிவானந்த் (சாகர் கல்வி குழுமம், ஐதராபாத்) கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் துனை இயக்குனர் பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள்.

Comment here