ஆன்மிகம்இந்தியாஉலகம்தமிழகம்பிரத்யகம்பொதுமாவட்டம்வரலாறுவீடியோ

நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இங்கு ஆனி மாதத்தில் ஆனி  திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விரு விழாவின் போது மட்டுமே மூலவரான நடராஜர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பர். இத்தகைய சிறப்பு வாய்ந்த, மார்கழி மாத ஆருத்ரா தரிசன வவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோயில்  நடைதிறக்கப்பட்டு நடராஜர் பெருமானுக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது கோயிலில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் நடைபெற்றது . இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்தி  வீதிஉலா நடைபெறுகிறது தொடர்ந்து 25  ந் தேதி  முதல் 31  தேதி வரை காலை, மாலை  பஞ்சமூர்த்தி வீதியுலாவும், வருகிற ஜனவரி 1 ந் தேதி திங்கட்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மறு நாள் 2 ந் தேதி  செவ்வாய்கிழமை முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகமசுன்டரி அம்பாளுக்கு, நடராஜபெருமானுக்கும் மகா அபிஷேகம் நடைபெறும். பின்னர் காலை 6  மணி முதல் 10   மணி வரை திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும், அதன்பிறகு பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்று நடராஜர்,  சிவகமசுந்தரிஅம்பாள்  கோயிலை அடைந்ததும்  ஆயிரம்கால் மண்டபத்தில்  எதிர், எதிர் திசையில் முன்னும் பின்னும் மூன்று முறை சென்று பக்தர்களுக்கு காட்சியளிப்பார் இதுவே ஆருத்ரா தரிசனமாகும். பின்னர் 3  ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துபல்லக்கில் வீதிஉலா காட்சியும்,  4  ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.  இதற்க்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சதர்கள் செய்து வருகின்றனர். ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடராஜர் கோயில் மின்னொளியில் ஜொலிக்கிறது. கோயில் பாதுகாப்பு பணியில் எராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விழாவைக்காண  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்ருந்தும் வெளிநாடுகளிலிருந்தும்,அதுமடுமள்ளது 35  ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்தும் வர உள்ளதை  மகிழ்ச்சியாக சிவா பக்தர்கள் வரவேற்கின்றனர்.

 

 

Comment here