நடிகர்கள் அரசியல் தலைவராவதா? – நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம்!

5 (100%) 1 vote

இப்போதெல்லாம் அரசியல் வாதிகள் பேசுவதை கூத்தாடிகள் அரசியல் பேசுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலங்களில் அரசியல் பற்றி தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி கடந்த 8ந்தேதி பிரகாஷ் ராஜ் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நமது காலத்தின் மிகப்பெரிய தவறுக்காக, அதைச் செய்தவர்கள் – பிரதமர் மோடி – மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைக்க மாட்டார்களா? என வெளியிட்டார்.

இதனிடையே , நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி  பெங்களூருவில் செய்தியாளர்களிடம்   பிரகாஷ் ராஜ் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதாவது திரைப்பட நடிகர்கள் தலைவரானால் நாட்டிற்கு பேரழிவு ஏற்படும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. நானும் எந்த அரசியல் கட்சியிலும் சேர போவதில்லை என பிரகாஷ்ராஜ் கூறி இருந்தார்.

இதன் பின்பு பெங்களூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என தடாலடியாக கூறவில்லை. நடிகர்கள் பிரபலமாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் அரசியலில் இறங்கக்கூடாது. ஆனால், தனக்கு செல்வாக்கு இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் அரசியலில் இறங்கினால் அதுதான் பேரழிவு என்று குறிப்பிட்டேன்.

நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து தெளிவான கண்ணோட்டத்தோடு, நடிகர்கள் அரசியலில் இறங்கலாம். அவர்கள் தங்களுடைய உழைப்பால் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்று விளக்கமளித்தேன். என பிரகாஷ் ராஜ் கூறினார்.

ஆனாலும் வரப்போகும் தேர்தலில் நான் ஒரு நடிகரின் ரசிகன் என்ற முறையில் ஒருபோதும் வாக்களிக்க மாட்டேன். அதற்கு பதிலாக பொறுப்புள்ள இந்திய குடிமகன் என்ற வகையில் நான் வாக்களிப்பேன் என தனது டுவிட்டரில் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

தான் கூறியது என்ன என்று மீண்டும் டுவிட்டரில் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார். அது இதோ:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*