சினிமா

நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது: பிரான்ஸ் அறிவிப்பு

                                         நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா துறையில் கமல்ஹாசனின் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியே விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

களத்துார் கண்ணாம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் திரைத்துறையில் 57 ஆண்டுகளை கடந்து மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். இவர் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உட்பட ஏராளமான சினிமா விருதுகளை பெற்றுள்ளார்.

இவரின் கலை திறனை பாராட்டும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

கமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், திரை கதாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

சினிமா துறையில் கமல்ஹாசனின் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் பிரான்ஸ் அரசு செவாலியே விருதை அறிவித்துள்ளது.

செவாலியே விருது கிடைத்தற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் ‛வாட்ஸ் அப் ஆடியோ’ வெளியிட்டுள்ளார்.

ஆடியோவில் அவர் பேசியது:

பிரெஞ்சு அரசு கலை, இலக்கியத்திற்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க மனம் உவந்துள்ளது. பெருமிதத்துடன், நன்றியுடன் பணிவுற்று அந்த விருதினை ஏற்கிறேன்.

அவ்விருதின் பெருமை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா சிவாஜி கணேசன் அவர்களையும் வடநாட்டு பாமரரும் அரிய செய்த காலம் சென்ற சத்ய ஜித்ரோவையும் என் கரம் கூப்பி வணங்குகிறேன்.

இச்செய்தியை எனக்கு தெரிவித்த இந்தியாவில் உள்ள பிரெஞ்சு துாதர் அலெக்ஸாண்டர் சிக்லர் அவர்களுக்கும் எனது நன்றி.

இனி நான் செய்ய வேண்டி கலை, இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன். கலை கடற்கரையில் கைமண் அளவு அள்ளிவிட்ட பெருமை எவ்வளவு சிறு பிள்ளைதனமானது என்பதை நான் உணர்கிறேன். வயதிலாது என்றும் ஆர்பரிக்கும் கலை கடல் அலைகள் இத்தகைய தருணங்களில் கரை மோதி என் போன்றோர் முகத்தில் தெளித்து பெருமித மயக்கம் களித்து உதடும் நெனைத்து உப்பிட்டவர் நினைவை உணர செய்கிறது.

இதுவரையிலான என் கலை பயணம் தனிமனித பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கைதாங்கி எழுத்தும் கலையும் அருவித்த பெரும் கூட்டத்துடனே நாம் ஏற்ற யாத்திரை இது என்பதையும் உணர்கிறேன். அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள்.

4 வயது முதல் என் கைப்பிடித்து படியேற்றி பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்டவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம். எனை பெற்றோர் இருந்து பார்க்க இயலாத குறையை என் குடும்பத்தில் எஞ்சியோர் பெரியோரும் இளையோரும் என் சிறு வெற்றிக்கும் ஆர்பரிக்கும் என் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது. நன்றியுடன் கமல்ஹாசன்.

Comment here