சினிமா

நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்!

தமிழ் திரைப்பட உலகின் சிறப்பான நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் விவேக். இவரது நகைச்சுவை லஞ்சம், மக்கள் தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை எடுத்துரைப்பதால் இவரை சிலர் ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

விவேக்கின் பெற்றோர் அங்கையா பாண்டியன் – மணியம்மாள். விவேக்கின் தாயார் மணியம்மாள்(86), சென்னையில் வசித்து வந்தார். இவர் மாரடைப்பின் காரணமாக இன்று காலமானார்.

நாளை அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. நடிகர் விவேக்கின் தாயார் மறைவுக்கு அவரது திரையுலக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Comment here