Sliderஇல்லறம்

நம், தொல்லியல் சின்னங்களை பற்றிய விழிப்புணர்

தமிழ் நாடு அதன் நெடிய பாரம்பரியம் மற்றும் பண்பாட்டால் தான், பிறபகுதிகளில் இருந்து வேறுபடுகிறது. நம், தொல்லியல் சின்னங்களை பற்றிய விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, வரலாற்று சான்றுகளை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.
எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்று தெரியாது என்பதுபோல , இந்தக்கல்வெட்டு எந்தக்கதையைக்கூறும் என்பது தெரியாது ,
அப்படித்தான் ,
புதுக்கோட்டை திருமய்யம் வட்டம் பொன்னமராவதி என்னும் ஊரில் உள்ள
சுந்தரராஜப்பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று இதுவரைக் கிடைக்காமல் போன தமிழ் நூல்பற்றிய செய்தியைத்தெரிவிக்கிறது .இப்படிக்கு கல்வெட்டுகள் மூலம் முன்னமே சில மறைந்து போன தமிழ் நூல்களைப்பற்றிய செய்திகள் வெளிவந் ததுண்டு .நமக்கு கிடைக்காமல் போன சில தேவார பாடல்கள்கள் கல்வெட்டு மூலம் கிடைத்ததுண்டு .
இங்கே பொன்னமராவதியில் கிடைத்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட நூல்
பேர் வஞ்சி ஆகும் .
மற மாணிக்கர் எனும் வீர்கள் குழுவைப் பற்றியச் சிறப்பை திருவரங்க குள்முடையான் எனும் புலவர் பேர் வஞ்சி எனும் நூலாகப்பாடினார் என்றும் , அதன் அரங்கேற்றத்தைக் கேட்டு மகிழ்ந்த அந்த வீரர்கள் , அந்தப்புலவருக்கு ,
மற ச்சக்கரவர்த்திப்பிள்ளை எனும் சிறப்புப்பெயரை வழங்கி , மேலும் பரிசாக
தூத்துக்குடியில் நஞ்சை புஞ்சை நிலங்கள் வழங்கினார்கள் என்று அந்தக் கூறுகிறது .மேலும் அந்தக்கல்வெட்டில் தேவன் திருவரங்க குள முடையான் மற ச்சக்கரவர்த்திப்பிள்ளைக்கு நஞ்சை புஞ்சை பாதியும் தமிழரை அருளிட்ட நால்வருக்கு பாதியுமாக விட்டோம் என்று விவரிக்கிறது.
இந்த சாசனத்தில் வரும் ஸ்வஸ்திஸ்ரீ சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவரின் ஆட்சிக்கு காலம் கி. பீ 1300 முற்பகுதியில் அரசாண்ட பாண்டியர் ஆவார் .
அவரத்துப்படையில் ஒரு குழுவினர் மற மாணிக்கர் ஆகும் .
அந்த குழுவினரின் வீர செயல்களை போற்றி பேர் வஞ்சி எனும் நூல் இயற்றப்பற்றிருக்கலாம் .
இதை இயற்றிய புலவரின் பெயர் தேவன் திருவரங்க குள முடையான் என்றும் அவருக்கு மற ச்சக்கரவர்த்திப்பிள்ளை என்று விருது வழங்கப்பட்டதால் அவர் மறவர் குல்த்தை சேர்ந்தவராக இருந்திருக்கலாம் .
இந்த நூல் நமக்கு கிடைத்திருந்தால் கி.பி 1300 இல் நிலவி வந்த பல சமூக வழக்கங்கள் வரலாறு நமக்கு கிடைத்திருக்கக்கூடும் .

இந்த கல்வெட்டு ஆவணப்படுத்தப்பட்டுவிட்டதா என்ற குறிப்பு இல்லை . இந்தக்கல்வெட்டுப்பற்றிய செய்தி , மறைந்து போன தமிழ் நூல்கள் எனும் மயிலை சீனி வேங்கடசாமியின் நூலில் கண்டேன் .
கல்வெட்டின் முழு விபரமும் அந்தப்புத்தகத்தின் 64/65 பக்கத்தில் உள்ளது .
கல்வெட்டின் முழு வடிவத்தையும் தட்டச்சு செய்ய சிரமம் இருந்ததால் இயலவில்லை .

இத்தகைய பாடல் பெருமளவு என்ன போர் அந்தக்கலக்கட்டத்தில் நடந்திருக்குமென கூகுளில் ஆய்ந்ததில் ,12-ம் நூற்றாண்டில் இங்கு பாண்டியர்-சிங்களவர் போர் நடைபெற்றது என்று ஒற்றை வரித்தகவல் கிடைக்கிறது
கோவலன் -கண்ணகி இருவரும் பூம்புகார் நகரிலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் பொன்னமராவதியில் உள்ள அழகிய நாச்சியம்மன் ஆலயத்தில் தங்கிச் சென்றதாக இங்கு பாடப்படும் பழம் பாடல்கள் கூறுகின்றன. இன்னமும் பல செய்திகள் உண்டு
எனினும் தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இன்னமும் அறியப்படாத வரலாற்றுச் செய்திகள் நிறையாக உள்ளது .என்பது உண்மை .
அண்ணாமலை சுகுமாரன்

Comment here