சினிமா

நயன்தாரா-வுக்காக கவிஞர் ஆன சிவகார்த்திகேயன்!

Rate this post

நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயன் ஒரு பாடலை எழுதி பாடலாசியராக மாறியுள்ளார்.

அறம் படத்தை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘கோலமாவு கோகிலா’எனும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். படத்தில், நயன்தாரா உடன் சரண்யா பொன்வண்ணன், ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ…’ என்ற முதல் லிரிக்கல் வீடியோ, கடந்த மார்ச் 8-ம் தேதி வெளியானது. விவேக் மற்றும் கவுதம் மேனன் இருவரும் இணைந்து எழுதிய இந்தப் பாடலை ஷான் ரோல்டன் பாட, இடையில் வரும் வசனங்களை கவுதம் மேனன் பேசியிருந்தார்.

இந்நிலையில், ‘கல்யாண வயசு…’ என்ற இரண்டாவது லிரிக்கல் வீடியோ, வருகிற 17-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப் பாடலின் வரிகளை எழுதி, முதன்முதலாக நடிகர் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக மாறியிருக்கிறார். நயன்தாராவுடன் ‘வேலைக்காரன்’ படத்தில் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன், தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் மறுபடியும் அவருடன் ஜோடி சேர இருக்கிறார். இந்நிலையில், அவருக்காகப் பாடல் எழுதியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராக மீடியா வாழ்க்கையைத் தொடங்கிய சிவகார்த்திகேயன், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, தற்போது பாடலாசிரியராகவும் மாறி தன்னுடைய அடுத்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

Comment here