தொழில்

நலிவுற்ற ஆலைகளை மீட்க அரசின் புதிய முயற்சி

புதுடில்லி :

இந்தியன் ஆயில், கோல் இந்தியா, என்.டி.பி.சி., ஆகிய நிறுவனங்கள் இணைந்து, கூட்டு தொழிலாக புதிய நிறுவனம் ஒன்றை அமைக்கிறது. இந்த புதிய நிறுவனம் மூலமாக, நலிவுற்றிருக்கும் மூன்று உர ஆலைகளை மீட்கும் முயற்சி எடுக்கப்பட இருக்கிறது.

புதிய நிறுவனத்துக்கு, ‘ஹிந்துஸ்தான் உர்வாரக் அண்டு ரசாயன் லிமிடெட்’ என பெயரிட்டிருக்கின்றனர். இதன் மூலமாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சிந்த்ரி, உத்தர பிரதேசத்தில் இருக்கும் கோரக்பூர், பீஹாரில் இருக்கும் பராயுனி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆலைகளை மீட்டெடுக்க உள்ளனர். இதற்காக, 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சியில், பெர்டிலைசர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனமும் சிறிய அளவில் பங்கேற்கிறது.

இது குறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அதிக நிதி வசதி கொண்ட நிறுவனங்கள் மூலமாக இந்த ஆலை களை சீர்படுத்த விரும்பியது அரசு. இதுகுறித்து அந்த நிறுவனங்களின் போர்டு மீட்டிங்கில் கலந்தாலோசித்து, அடுத்த மாதம் முடிவு எடுக்கப்படும். மொத்தம், 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படலாம். 2020 டிசம்பருக்குள் ஆலைகளை மீட்க வேண்டும் என, அரசு விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comment here