Sliderமாவட்டம்

நவாமரத்துப்பட்டியின் ஸ்படிகலிங்கம்

Rate this post

திண்டுக்கல் நவாமரத்துப்பட்டியின்
சிவகிரி மலைகுன்றின் மீது இருந்த சிவலிங்கத்தில் இருந்த ஸ்படிகலிங்கம் பல ஆண்டுகளுக்கு முன்னால் திருடு போன காரணத்தால் சிவபூசை தடைபட்டு இருந்தது. சிவலிங்கத்தின் ஆவுடையார் மட்டும் காலப்போக்கில் மண்ணில் புதைந்து விட்டது. மக்களும் இதை பற்றி மறந்து விட்ட நிலையில் நடந்த மிகப் பெரிய அதிசயம்.

ஒளி ரூபமாகவும், அசரீரி மூலமாகவும் சித்தர்கள் வந்து பூமிக்கடியில் புதைந்து கிடந்த அந்த சிவலிங்கத்தை ஊர் மக்களுக்கு வழி காட்டிய உண்மை சம்பவம் நடந்த இடம் .

திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் இருந்த ஒருவருக்கு,
பாம்பாட்டி சித்தர் மூலமாக இந்த இடத்தை பற்றியும், சுனை அருகில் உள்ளதையும் கனவில் காட்டி கொடுத்து
இந்த இடத்தில் மீண்டும் சிவபூசை செய்யும் படி கனவு மூலம் உணர்த்த பட்ட இடம்.

அப்பேர்பட்ட மிகப் பெருமை வாய்ந்த தலம், ஆனாலும் மீண்டும் சிவபூசை நடத்த முடியாமல் பல பல தடைகள் பல்வேறு காரணங்களால், ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

மகாகுரு அகத்தியர் தனது நாடியில்
இந்த இடத்தில், 11 ஜீவசமாதிகள் உள்ளதாகவும், பல்வேறு ரகசியங்கள் இந்த இடத்தில் புதைந்து உள்ளதாகவும் ,
அதை தேவகணங்கள் பாதுகாத்து கொண்டிருப்பதாகவும், அகத்தியன் மைந்தனால் மட்டுமே வந்து தலைமை ஏற்று மீண்டும் இந்த இடத்தில் சிவன் கோயில் எழுப்பி, சிவலிங்கம் பிரதிஸ்டை செய்து நடத்தி முடிக்க முடியும் என்று நாடியில் கூறியுள்ளபடி தற்போது,

பல காலமாக தடை பட்டிருந்த அந்த சிவலிங்க பூசை , தற்போது பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று அகத்திய கிருபா சிவத்திரு அன்புச்செழியன் ஐயா அவர்களால் புதியதாக பிரதிஸ்டை 12.11.2018 அன்று மாலை 6.00 மணிக்கு  செய்யப்படும் ஸ்படிகலிங்கம் , பஞ்சலிங்கம், அர்த்தநாரீசுவரர் மஹா யந்திரம் மற்றும் 18 சித்தர்கள், மகாகுரு அகத்திய பெருமான் சிலைகள் பிரதிஸ்டை 13.11.2018 அன்று  காலை 6.00 மணிக்கு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் வரும் 14.11.2018 புதன்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளதால் அனைவரும் வருக.

அகஸ்த்திய கிருபா
சிவத்திரு ஶ்ரீ  அன்புச்செழியன்

Comment here