Sliderவானிலை

நாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா.. 11 கி.மீ வேகத்தில் நகருகிறது… வெளிப்பகுதி கரை தொட்டது!

Rate this post

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் நாகைக்கு கிழக்கே 130 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் வெளிப்பகுதி கரையைத் தொட்டு விட்டது. கடலூர் மற்றும் பாம்பன் நடுவே நாகை அருகே இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று இரவு 8 மணியிலிருந்து 11.30 மணிக்குள் புயல் முழுமையாக கரையைக் கடக்கும். நாகை அருகே அது கரையைக் கடக்கும். இந்த நேரம் என்பது 1 அல்லது ஒன்றரை மணி நேரம் முன்-பின் இருக்கலாம். இப்போது புயல் மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.

புயலால் சென்னைக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. மிதமான மழை மட்டுமே பெய்யும். சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தஞ்சை, நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 6 மாவட்ட, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலச்சந்திரன் மேலும் கூறுகையில் தற்போது புயலின் வெளிப்பகுதி கரையைத் தொட்டு விட்டது. இதனால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்து உட் பகுதி, மையப் பகுதி, கண் என கரையைத் தொட ஆரம்பிக்கும். அப்போது காற்றின் வேகமும் படிப்படியாக அதிகரிக்கும் என்றார்.

Comment here