உலகம்

நாங்கள் கண்ணாடி போன்றவர்கள் : ரஷ்ய அதிபர் புதின்

ஒசாகா,

ரஷியா, இந்தியா, சீனா முத்தரப்பு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டனர். முத்தரப்பு தலைவர்களின் கலந்துரையாடல், உலகளாவிய பிரச்சினைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது என மோடி குறிப்பிட்டார்.

ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 3 நாடுகளும் மிகக்கடுமையான உலக, பிராந்திய பிரச்சினைகளை சமாளிப்பதில் ஒத்துழைத்து வருவதற்கு ரஷிய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக புதின் மற்றும் தெரசா மே சந்தித்து பேசினர். இதுபற்றி தெரசா அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், பொறுப்பற்ற மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் செயல்களை ரஷ்யா நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லாமல் போய் விடும் என புதினிடம் மே கூறினார் என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி செய்தியாளர்கள் மாநாட்டில் புதின் பேசும்பொழுது, யாருக்கு எதிராகவும் ஆக்ரோச செயல்களில் ஈடுபடும் நோக்கம் எதுவும் எங்களுக்கு கிடையாது. இது கற்பனையான ஒன்று.

வெளிநாட்டினரை நோக்கிய எங்களது செயல்கள் சரியான விகித அளவிலானவை. எங்களை எப்படி நடத்துகிறார்களோ அதன்படியே நாங்களும் அவர்களை நடத்துவோம். இதனை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் எதுபோன்ற நடவடிக்கைகள் இருதரப்பு உறவுகளில் பாதிப்பு ஏற்படுத்தும், என ரஷ்யா கவனத்தில் கொண்டுள்ள விசயங்களை பற்றி இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டு பேசினேன் என்றும் புதின் கூறியுள்ளார்.

Comment here