சினிமா

‘நானே வருவேன்’ பட போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ்…!

Rate this post

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

இந்நிலையில், ‘நானே வருவேன்’ திரைப்படம் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதனையடுத்து, நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘நானே வருவேன்’ திரைப்படத்தை 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

 

Comment here