பொது

நாய்க்குட்டி அவ்வளவு ஸ்பெஷலானது

நாய்க்குட்டியும் அவ்வளவு ஸ்பெஷலானது. அதிலும் வீட்டில் இத்தனை நாட்களாக வளர்த்த நாய் குட்டி போடும் போது, அந்த குட்டியை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கும். பிறந்த நாய்க் குட்டிக்கு பாலைக் கொடுக்க, தாய் நாய் அருகில் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் தாய் இல்லாமல், வெறும் குட்டியை மட்டும் கடைகளில் இருந்து வாங்கி வந்தால், அதற்கு பாலை கொடுக்க ஒரு நாயிடம் தான் கொண்டு செல்ல வேண்டும். இவ்வளவு பிரச்சனை இருப்பினும், அனைத்து மக்களும் சற்று பெரிய நாயை வாங்குவதை விட, குட்டியை வாங்க தான் ஆசைப்படுவார்கள். ஏனெனில் பெரிய நாயை விட, சிறிதாக இருக்கும் நாய் நன்கு பழகிவிடும். மேலும் எந்த ஒரு பயமும் இல்லாமல் இருக்கும். ஆகவே அத்தகைய பிறந்த குட்டி நாயை ஒரு சிறந்த பெற்றோராக இருந்து வளர்க்க, ஒருசிலவற்றை மனதில் கொள்ள வேண்டும். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

* குட்டி நாய்களுக்கு சற்று வெதுவெதுப்பான சூழ்நிலை இருக்க வேண்டும். அதிலும் 90 டிகிரி வெப்பநிலை அதற்கு சரியானது. அதனால் தான் நாய் குட்டி அடிக்கடி தன் தாயின் பக்கத்தில் ஒட்டி தூங்குகிறது. ஆகவே தாய் நாய் அருகில் இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், குட்டியை மட்டும் வைத்திருந்தால், அதற்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும்.

* நாய் குட்டி பிறந்ததும் அது குறைந்தது 16 முதல் 18 மணிநேரம், பிறந்த குழந்தையைப் போன்றே தூங்கும். இந்த அமைதியான தூக்கம் அனைத்தும் ஒரு சில வாரங்கள் மட்டுமே. ஆகவே அதற்கு ஏற்றவாறு எப்படி குழந்தைகளுக்கு தொட்டில் செய்து தூங்க வைக்கின்றோமோ, அதேப் போல் அதற்கு ஒரு தொட்டி போன்று அமைத்து, அதில் படுக்க வைக்க வேண்டும்.

* குட்டி நாய்க்கு பிறந்ததும் இரண்டு நாட்கள் கண்கள் தெரியாது. நிறைய தாய் நாய் தன் குட்டிகளுக்கு கண்கள் தெரியாத நிலையில் தான் பாலைக் கொடுக்கும். அதன் கண்கள் திறக்க இரண்டு நாட்கள் ஆகும், சில நாய்களுக்கு ஒரு வாரம் கூட ஆகும். இந்த நேரத்தில் அதனால் சரியாக நடக்க கூட முடியாது. இருப்பினும் மெதுவாக நகரும். எனவே அச்சமயத்தில் அதை சரியாக வழிநடத்த வேண்டும்.

* தாய் நாய் இல்லாமல் குட்டி நாய்களுக்கு உணவை ஊட்டுவது என்பது எளிதானதல்ல. ஆகவே அதற்கென்று இருக்கும் ஒரு ஸ்பெஷல் பாட்டிலில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி கொடுக்க வேண்டும். அதனால் பாட்டில் நிப்புல் மூலம் சாப்பிட முடியவில்லை என்றால், அப்போது அதன் வாயில் அந்த பாலை ஸ்பூனால் ஊற்ற வேண்டும். * நிறைய நாய் குட்டிகள் சீக்கிரம் நடக்க தொடங்கிவிடும். குழந்தைகள் நடக்க ஒரு வருடம் ஆகலாம், ஆனால் நாய் குட்டிகள் நடக்க ஒரு வாரம் போதும். ஆனால் நடப்பது மட்டும் தான் வேகமாகவே தவிர, அதன் மூளை வளர்ச்சி மிகவும் குறைவாக தான் இருக்கும். மேலும் அது விரைவில் நடப்பதால், எங்கு வேண்டுமானாலும் செல்லும், ஆகவே அதனை இந்நேரத்தில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

* குட்டி நாய்களுக்கு விரைவிலேயே பற்கள் முளைத்துவிடாது. அது முளைக்க ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும். ஆகவே அவ்வாறு பற்கள் முளைக்கும் போது, அதற்கு எதையாவது கடிக்க வேண்டும் என்று தோன்றும். எனவே அதற்கு ஏதேனும் பொம்மைகளைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அது நாற்காலி, கட்டில் போன்றவற்றை கடித்து மெல்லுவதற்கு ஆரம்பிக்கும். எனவே, இவை அனைத்தையும் மனதில் கொண்டு, உங்கள் வீட்டு செல்ல நாய்க்குட்டிகளை பாதுகாப்பாக வளர்த்து, மகிழுங்கள்.

Comment here