ஆன்மிகம்இல்லறம்உலகம்கல்விகுழந்தை நலம்தமிழகம்தொழில்வாழ்க்கை நலன்

நாழிக்கிணறு ;;

5 (100%) 2 votes

நாம் வழிபட செல்லும் ஆலயங்களில் கோயில் தீர்த்த குளம் அமைத்திருக்கும். சன்னதிக்கு செல்லும் முன்பு குளத்திற்கு சென்று நீராடி செல்வர். போதிய வசதி இல்லாத பட்சத்தில் கை கால் முகம் கழுவி தலையில் தண்ணீர் தெளித்து கொள்வது வழக்கம், ராமேஸ்வரம் ராமநாதசாமி திருகோயிலில் 21  கிணறுகளில் நீராடி இறைவனை தரிசிப்பர்  அது போல  திருச்செந்தூர் முருக பக்கதர்கள்  கடலில் நீராடி பின்பு  அருகில் உள்ள நாழிக்கிணற்றில் நீராடுவர். இந்த நாழி கிணற்றில் எந்த காலத்திலும், இன்னும் சொல்லபோனால் கோடைக் காலத்திலும் கூட அள்ள, அள்ள குறையாமல் சுவையான தண்ணீர் பொங்கியபடியே  உள்ளது.  ஒரு அடி நீல அகலத்தில், கையில்  வாளியை வைத்து தண்ணீரை எடுக்கும்  அளவு  ஆழத்துடன்  இருக்கிறது.  இக்கிணறு சூரசம்காரம் முடித்ததும்  முருகபெருமான் தனது வேலை ஊன்றியதால், இந்த நீருற்று தோன்றியதாக நம்பபடுகிறது.  கடற்க்கரைக்கு அருகிலுள்ள ஊற்றிலிருந்து  நன்னீர்  கிடைப்பதுதான்  இதன் அதிசயம். கடலில் குளித்து முடித்துவரும் பக்கதர்கள், இங்கும் நீராடி  உடை மாற்றிக்கொண்டு  திருச்செந்தூர்  முருகபெருமானை தரிசித்து  முருகபெருமானின் அருள் பெற்று செல்கின்றனர்.

Image result for நாழிக்கிணறு ;;

Comment here