நியூஸ் ஜெ லோகோ அறிமுகம் செய்தார் முதல்வர்

Rate this post

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நியூஸ் ஜெ சேனலின் லோகோ மற்றும் ஆப்ஸை அறிமுகம் செய்தனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஜெயா டிவியை கட்சிக்கு பலமாக செயல்பட்டு வந்தது. ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு நடைபெற்ற பல்வேறு அரசியல் சூழல் காரணமாக ஜெயா டிவி, டாக்டர் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை ஆகியவை டிடிவி தினகரனின் வசம் சென்றது. இதனால், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரது தலைமையின் கீழ் “நமது புரட்சித் தலைவி அம்மா” என்ற பத்திரிகையை தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, ஜெயா டிவிக்கு இணையாக தனி சேனல் தொடங்க ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, “நியூஸ் ஜெ” என்ற பெயரில் இந்த புதிய சேனல் உதயமாகி உள்ளது. சேனலை துவக்குவதற்கான அனைத்து பணிகளும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில். நியூஸ் ஜெ சேனலின் லோகோவை கடந்த 12ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்து வைத்தனர். இதில், அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். அநேகமாக இம்மாத இறுதியில் இந்த புதிய சேனல் ஒளிபரப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*