அரசியல்இந்தியாகோர்ட்சம்பவம்தமிழகம்பொதுமாவட்டம்

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு : பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா விரைவில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா நீதிமன்றத்தை அவதூறாக பேசியதற்காக எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கலந்துக் கொண்டார். அப்போது, எச் ராஜா மேடையில் மட்டுமே பேசுவேன், தரையில் பேசமாட்டேன் என்றார். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால், எச்.ராஜா, போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்தும், போலீசார் குறித்தும் மிக அவதூறாக பேசினார். சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்வு வேகமாக பரவியது. இதற்கிடையே, திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். குறிப்பாக, சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், எச். ராஜா உள்பட 8 பேரை கைது செய்வதற்காக ஆய்வாளர் மனோகரன், ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Comment here