கதை

நீதியா அநீதியா?

NTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசசிவாச்சாரியார்*….

ஆராய்ச்சி மணி கட்டி ஆளப்பட்ட தமிழகம், பசுவின் கன்றை தன் மகன்
தேர் ஏற்றி கொன்று விட்டதை பசு
ஆராய்ச்சி மணியடித்து நீதி கேட்க, மன்னன் தன் மகனை தேரேற்றி கொன்று நீதி காத்த மனுநீதி சோழன் ஆண்ட சோழநாடு,
மதுரையில் தன் கணவன் கோவலன் கல்வனென்று நீதி தவறி கொலையுண்டான் என்று கேள்வியுற்ற கண்ணகி கையிற் சிலம்புடன் பாண்டியன் நெடுஞ்செழியன் அரசவையில் ” தேரா மன்னா” நீ
நீதி தவறி விட்டாய் என கனல் கக்க,
உன் கணவன் கள்வனல்ல, யானே கள்வன் என்று கூறி அந்த நொடியே உயிர் நீத்து, நீதி காத்த பாண்டியன் நெடுஞ்செழியன் ஆண்ட தென்மதுரை பாண்டிய நாடு

பணி நிமித்தமாக தன் தூதுவனை வெளியூர் அனுப்பிய மன்னன் பாண்டியன் சில நாள் கழித்து நகர் வலம் வரும் போது தூதுவன் வீட்டை கடந்த போது தூதுவன் வீட்டில் ஆண் குரல் கேட்டு, மன்னன் அந்த வீட்டு கதவை தட்ட, யார் என்று கேட்ட குரல் தூதுவன் குரலாக இருக்க,
மன்னன் சென்று விட
மறுநாள் அரசபையில் இது குறித்து தூதுவன் முறையிட்டு தட்டியவனை தண்டிக்க வேண்டும் என்று கூற, தவறாக தட்டியது தான் தான் இதோ அதற்கு தண்டனை என்று உடைவாளை எடுத்து தட்டிய கையை துண்டித்து நீதி காத்த பொற்கை பாண்டியன் ஆண்ட தமிழ்நாடு

புறா ஒன்றை கழுகு துரத்தி வர, புறா
சிபி சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புக,
கழுகு எனக்கு புறா தான் வேண்டும் என்று வாதாட , நீ பசியாற மாமிசம் தானே வேண்டும் என் சதை தருகிறேன் என்று கூற, கழுகு புறாவின் எடைக்கு எடை மாமிசம் வேண்டும் என்று கேட்க, மன்னன் துலாக்கோல் கொண்டு வரச் சொல்லி அதில் ஒரு தட்டில் புறாவை வைத்து மறுதட்டில் தன் சதையை அறுத்து வைத்தான். உடலில் பாதி சதையை அறுத்து வைத்தும், துலாக்கோல் நேராகாததால் மறு பக்கம் தானே ஏறி அமர்ந்து துலாக்கோலை நேர் செய்த சிபி சக்கரவர்த்தி ஆண்ட நாடு,

இது போன்ற நீதிமான்கள் ஆண்ட திருநாடு …. ஆனால் இன்றோ ???

பணம் படைத்தோர்க்கு ஒரு நீதி,
பதவியில் இருப்போர்க்கு ஒரு நீதி,
ஏழைக்கு ஒரு நீதி,
ஊருஊர்ஒரு நீதி,
மாநி மாநிலத்திற்கு ஒரு நீதி,
1000 ரூ லஞ்சம் வாங்கினால்
3 ஆண்டு சிறை,
கோடியில் லஞ்சம் வாங்கினால்
அசைக்க முடியாத பதவி,

கற்றோரே, சிந்தனை சிற்பிகளே, இன்று நீதியின் காண்பீர்,
காரணகர்த்தாக்கள் யார் ?
கண்டும் காணாது போனால்,
நாளை நம் கதியும் அதோகதிதான்.
நன்றி….

Comment here