உலகம்

நீளமான கால்வாய்

சீனப் பேரரசர்கள் பலரால், பல நூற்றாண்டு காலத்துக்கு வெட்டப்பட்டது இந்தக் கால்வாய். அப்பேரரசர்கள் தமது குடிமக்களை கட்டாயப்படுத்தி இக்கால்வாயை வெட்டச் செய்தனர்.

இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டதன் நோக்கம், விவசாயத்துக்குப் பயன்படுத்துவது அல்ல. போர்க்காலத்தில் படைவீரர்களை படகுகள் மூலம் விரைவாக இடம் விட்டு இடம் நகர்த்துவதுதான்.

ஆனால், சீனாவின் வளமான தெற்குப் பகுதியில் இருந்து வறண்ட வடக்குப் பகுதிக்கு உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லவே கிராண்ட் கெனால் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

இக்கால்வாயின் ஒரு பகுதி, தற்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. பெரும்பாலும் உணவுப்பொருட்களையும், தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகளுக்கு மூலப்பொருட்களையும் கொண்டு செல்ல இந்தக் கால்வாய் உபயோகிக்கப்படுகிறது.

சீனாவிலேயே, அனேகமாக உலகிலேயே மிகப் பெரிய கால்வாயாக கிராண்ட் கெனால் அமைந்திருக்கிறது.

Comment here