பொது

பச்சை_மிளகாய் பற்றி

உணவுக்குக் காரச்சுவை சேர்க்கும் பச்சை மிளகாய் பற்றிய சில தகவல்கள்:

இந்திய உணவுகளில் மிகவும் முக்கியமான பொருள் பச்சை மிளகாய்.

பச்சை மிளகாயில் இருக்கும் காரத்தைத் தரும் கேப்சைசின் (Capsaicin) என்ற பொருள் மூளையில் உள்ள நம் உடலைக் குளிர்விக்கும் இடத்தைத் தூண்டிவிட்டு, உடலின் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறதாம்.

இதனால்தான், உலகில் வெப்ப மண்டலத்தில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் மிளகாய் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது.

மிளகாயைச் சாப்பிட்டதும் உடலில் இருக்கும் வலியைக் குறைப்பதோடு நம்மை ஆசுவாசப்படுத்துமாம்.

பச்சை மிளகாயில் இருக்கும் வைட்டமின் கே, எலும்புப்புரை (Osteoporosis) நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

மெக்ஸிகோ நாட்டில் கி.மு. 3500 முதல் மிளகாய் விளைவிக்கப்படுகிறது; கி.மு.7000 முதலே அந்நாட்டவர்கள் அதைச் சாப்பிடுகிறார்கள்.

6000 ஆண்டுகளுக்கு முந்தைய மிளகாய் விதைகள் பெரு நாட்டில் கிடைக்கின்றன.

மிளகாய் சாப்பிடும்போது கவனித்திருக்கிறீர்களா? முதல் கடியை விட, இரண்டாம் கடி காரமாக இருக்கும்.

இதற்கான காரணம், காம்பிற்கு அருகில் செல்ல செல்ல கேப்சைசின் அளவு அதிகரித்துக்கொண்டே போகும். அதனால், மிளகாய் காரமாகிக்கொண்டே இருக்கும்.

கேப்சைசின் என்ற பொருள் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மட்டுமே காரமாக இருக்கும், எரிச்சலை உருவாக்கும். பறவைகளுக்கு அது காரமாக இருக்காது.

மிளகாய் விதைகள் பெரும்பாலும் பறவைகள் மூலமாகவே வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றன.

பறவைகளுக்குக் காரம் தெரியாததால், மிளகாயைச் சாப்பிட்டு அந்த விதைகளைப் பரவச் செய்கின்றன.

ஆரஞ்சுதான் வைட்டமின் சி அதிகமாக இருக்கும் உணவுப் பொருள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

ஆனால், ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி மிளகாயில் இருக்கிறது.

Comment here