பஞ்ச வாத்தியம்!

Rate this post

 

சிவ பூஜையின் போது ஐந்து வாத்தியங்களை இசைப்பது சிறந்தது! அவையாவன தோல் கருவிகள், துளை கருவிகள், நரம்பு கருவிகள், உலோக கருவிகள், இயற்கையாக தோன்றிய இசை கருவிகள் என ஐவகை கருவிகளை இசைத்து எல்லாம் வல்ல இறைவனை இந்த சிவ ராத்திரியில் பிராத்திப்போம் ஆக!

சங்கு, கொம்பு, பிரம்ம தாளம், உடல், குட்டத்தாரை, திருச்சின்னம், நெடுந்தாரை போன்ற வாத்தியங்களை சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போதும், ஆராதனையின்போதும் இந்தக் கயிலாய வாத்தியங்களை ஆலயங்களில் வாசிக்கிறார்கள்.

திமிலை, மத்தளம், இந்தளம், உடுக்கை, கொம்பு கேரள மாநிலத்தின் கோயில்களில் வாசிக்கப்படும் ஐந்துவகை இசைக்கருவிகள்.

பஞ்சமுக வாத்யம் என்னும் தோல் கருவி ஒரு அரிய இசைக் அருவி. இது தேவாரத்தில் “குடமுழா” என்று குறிப்பிடப் படுவதிலிருந்து ஒரு காலத்தில், சோழநாட்டில் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டது தெரிகிறது.

இது பஞ்ச உலோகத்தால் ஆகியது. அதன் அடிப்பகுதி கடம் என்னும் வாத்தியம் போல பெரிய பானை வடிவத்தில் இருக்கும். அதற்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் வட்ட வடிவில் இருப்பதால் அதை வட்டத் தட்டு என்பர். இதைப் பசுத்தோல் போற்றி மூடி இருப்பர். ஒவ்வொரு முகத்தின் – வட்டத் தட்டின் – மீதும் மூடப்பட்டதோலின் கனமும் வேவ்வேறு அளவில் இருப்பதால் இது வெவ்வேறு ஒலியை எழுப்பும். அதாவது ஐந்து முகங்களும் ஐந்து விதமான ஓசையை எழுப்பும்.

இதை சிவன், தாண்டவம் ஆடும் போது, நந்திகேசுரர் வாசிப்பார்.

தொகுப்பு ஸ்ரீ புகழேந்தி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*