கல்வி

பட்டிணத்து அடிகள்

இராவணனின் தம்பி முறை கொண்டவர் குபேரன். இராவணன் தன் தம்பிகளோடு சிவனை நோக்கி தவம்புரிய சிவபெருமானும் இராவணனின் கடும்தவத்தை மெச்சி வேண்டும்வரம் தருவதாக கூறுகிறார்.அதன்படி ஈசனின் பக்தனான இராவணன் ஈஸ்வரர் பட்டம்பெற்று இராவணேஸ்வரன் என அழைக்கப்பட்டதோடு எப்படிபட்டவரையும் கொல்லும் இரண்டு நாகாஸ்திரத்தையும் சிவதனுசு என்ற வில்லையும் பெறுகிறான். கும்பகர்ணன் பிரம்மதேவன் சூழ்ச்சியால் நான் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வரம் பெறுகிறான். விபூஷ்ணனும் வரம்பெறுகிறான். கடைசியாக குபேரனுக்கு என்ன வரம்வேண்டுமென ஈசன் கேட்க எமக்கு ஈசனோடு இருக்கும் பாக்கியம் கிடைத்தால் அதுவே போதும் என குபேரன் கூறுகிறார்.உடனே ஈசனும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உன்னிடத்தில் என் சிவலோகத்தில் உள்ள அனைத்து செல்வத்தையும் காக்கும் பொருப்பில் அமர்த்துகிறேன் என கூறி செல்வத்திற்கு அதிபதியாக குபேரனை நியமிக்கிறார்.அந்த குபேரனும் ஈசனும் பூமியை காண வலம்வருகின்றனர்.காவிரி வளம் கொழிக்கும் ஒரு ஊரினை கண்டதும் குபேரனுக்கு நம் தேவலோகத்தில் இதுபோன்ற எழிலை காண முடியவில்லையே. குயில்களின் இசையும் மயில்களின் நடனமும் நதியின் இசையும் அழகிய மலர்களின் நறுமணமும் அழகிய வயலும் பொய்கையும் வாழை மா பலா என பழுத்த முக்கனிகளும் அன்பான மக்கள் ஈசனின் ஆலயம் இத்தனையும் அனுபவிக்க அப்பப்பா ஒரு பிறவி போதாதே என ஒருகணம் நினைக்கிறார் குபேரன்.சுந்தரர் ஒரு கணம் நந்தவனத்தில் இரு பணிபெண்களை ஒரு இமைபொழுது நோக்க அவருக்கு பூமியில் பிறந்து வாழும்படி அனுப்பி வைக்கிறார்.குபேரன் மட்டும் என்ன விதிவிலக்கா.உடனே குபேரனையும் குபேரா நினைத்தது போலவே ஒரு பிறவி இப்பூமியில் பிறந்து உமது ஆசையை தீர்த்துகொண்டு வா என கூறிவிடுகிறார் ஈசன்.அவர் கூறியது போலவே குபேரனும் பட்டிணத்து அடிகளாக இப்புவியில் அவதரிக்கிறார். இதுதான் பட்டிணத்து அடிகளின் முற்பிறப்பு.இப்போது பட்டிணத்து அடிகளின் வரலாற்றுக்கு வருவோம். பட்டிணத்து அடிகள் குபேரன் அவதாரம் என்பதால் அவர் பிறந்தபோதே மிகுந்த செல்வந்தர்.அவரது வீட்டின் கதவும் வாயிற்காலும் வெள்ளியில் செய்யப்பட்டு இருந்ததாம்.மன்னர் நகர்வலம் வந்தபோது பட்டிணத்தார் வீட்டை பார்த்து திகைத்துபோய் பட்டிணத்ததாரை அழைத்து நாளைமுதல் நீங்கள் வெள்ளிகதவை உபயோகிக்ககூடாது கழற்றிவிடவும்என கூறுகிறார்.மறுநாள் பட்டிணத்தார் வெள்ளிகதவை கழற்றி தங்கத்தால் ஆன கதவை பொருத்துகிறார். மன்னர் நகர்வலம் வந்தபோது தங்ககதவை பார்த்து மேலும் அதிர்ந்துபோய் பட்டிணத்தாரிடம் உங்களை வெள்ளிகதவை கழற்றசொன்னேனே என கூற பட்டிணத்தாரும் அதனால்தான் மன்னா வெள்ளி கதவை கழற்றி தங்ககதவை மாட்டியுள்ளேன் என கூற மன்னன் அதற்க்குமேலும் பேச வழியின்றி திரும்பி செல்கிறார். அப்படிபட்ட செல்வந்தர் பட்டிணத்தார் அவரது செல்வத்தை காக்கும் பொருப்பில் இருந்தவர் சேந்தனார் பெருமான். இப்படிபட்ட பட்டிணத்தார் ஒருநாள் நம் உயிர் நம்மைவிட்டு நீங்கிவிட்டால் அதன்பின் இப்பெருஞ்செல்வத்தால் என்ன பயன் விளையபோகிறது என நினைக்கிறார். காதறுந்த ஊசி கடைவீதி வாராதுகாண் என்ற பாடல் அவர் மனதை பெரிதும் வாட்டுகிறது.உடனே பட்டிணத்து அடிகள் சேந்தனாரை அழைத்து நம் பெட்டகத்தில் உள்ள அனைத்து செல்வத்தையும் மக்களுக்கு வழங்க உத்தரவிடுகிறார். அதன்படியே சேந்தனாரும் அனைத்து செல்வத்தையும் மக்களுக்கு வாரி வழங்கிவிடுகிறார். பட்டிணத்து அடிகள் ஒரு கோபிணம் கட்டிக்கொண்டு ஆண்டி கோலம் பூணுகிறார். சேந்தனார் பட்டிணத்தாரிடம் ஐயா யான் என்செய்ய என கேட்கிறார். பட்டிணத்தாரும் தாங்கள் சிதம்பரம் சென்று அங்கு ஏதாவது தொழில்செய்து பிழைப்பு செய்யுங்கள் என கூறி அனுப்பிவிடுகிறார்.பின்னர் ஒருநாள் பட்டிணத்தார் ஒருமரத்தடியில் உள்ள மேடைமீது கோபிணத்தோடு அமர்ந்திருக்கிறார். அவரை கண்ட மன்னன் என்ன இதுகோலம் அன்று தங்ககதவை உன் வீட்டுக்கு மாட்டினாய் இன்று ஆண்டிகோலத்துடன் இருக்கிறாயே என கூற அதற்கு பட்டிணத்தார் அன்று என் இல்லம் தாங்கள் வந்தபோது நான் எழுந்துவந்து உங்கள் முன் நின்றுகொண்டு பேசினேன்.ஆனால் இன்று நான் அமர்ந்துகொண்டு இருக்கிறேன் மன்னராகிய தாங்கள் என்முன் நின்றுகொண்டு இருக்கிறீர்கள் என கூறவும் மன்னன் நானி தலைகுனிந்து அங்கிருந்து செல்கிறார். பட்டிணத்து அடிகள் பெரும் செல்வந்தராய் இருந்து அந்த செல்வத்தை மக்களுக்கு அளித்துவிட்டு மாளிகையை இழந்து ஆடை அணிகலன் இழந்து கோபிணம் அணிந்து ஒருவேலை உணவையும் அடுத்தவரிடம் யாசகம்பெற்று உண்டு பரதேசி போன்று வேடம்கொண்டு இருப்பதை காணமாட்டாது அவரது சகோதரியாகப்பட்டவர் அப்பத்திலே கொடிய நஞ்சை கலந்து பட்டிணத்தார் உண்பதற்க்காக கொடுக்கிறார்.தன் ஞானத்தால் நஞ்சு கலந்திருப்பதை அறிந்த பட்டிணத்தார் அந்த அப்பத்தை தன் சகோதரி வீட்டின் கூறைமீது வீசி எறிந்து தன் அப்பன் தன்னை சுட்டால் வீட்டப்பன் ஓட்டை சுடும் என கூறவும் வீட்டின் கூறை தீ பிடித்து மளமளவென எரியதுவங்குகிறது.அப்படிபட்ட ஞானி பட்டிணத்து அடிகள்.ஒரு மடமாது பாடலில் மனிதனின் வாழ்க்கை பயணமாகிய தொட்டில் முதல் சுடுகாடு வரை அனுபவிக்கும் அத்துனை சம்பவங்களையும் கசக்கி பிழிந்து சாறெடுத்து பருக பருக தெவிட்டாத அளவிற்கு பதிகமாக அருளி இருப்பார்.மேலும் அடிகள் அவர்கள் அவரது தாயார் இறந்த சேதி அறிந்து அன்னையாரின் இறுதி சடங்கின்போது அருளிய அப்பதிகத்தை கேட்டால் உருகாத கல்நெஞ்சும் உருகி கண்ணீராய் வழிந்தோடும். அப்பதிகம் தாய்மையின் உன்னத நிலையை நம் நெஞ்சத்தில் ஈட்டியாய் பாய்ச்சி இருக்கும்.தேவர்கள் பலர் இருந்தும் குபேரனிடம் செல்வத்தை ஈசன் ஏன் ஒப்படைத்தார் என்பதற்கு பட்டிணத்தாரின் செல்வம் மீது பற்றில்லாத தன்மையே ஒரு சான்று.செல்வம் மீது பற்றுள்ளவரிடம் அதை ஒப்படைத்தால் பிறருக்கு கொடுத்கு உதவமாட்டார்கள் அல்லவா.அதேபோல் இராவணன் எனும் சிவபக்தனை இராமர் வதம் செய்கிறார் இராமாவதாரத்தில்.அதே இராமர் வேங்கடவனாக அவதரிக்கும்போது இராவணன் வம்சத்தில் வந்த இராவணன் தம்பியாம் குபேரனிடம் கடன்பெற்று கடனை திருப்பி அளிக்கமுடியாமல் ஆண்டிற்கு ஒருநாள் கோபிணத்துடன் ஆண்டிக்கோலம் கொண்டு அனுபவிக்கிறார். முற்பிறவி வினைபலனை இப்பிறப்பில் அனுபவிக்கிறார். அவ்வினைக்கு இவ்வினை ஆண்டவனுக்கும் உண்டு.தமிழனாய் நாம் பிறந்ததற்கு பெருமைகொள்ள வேண்டும்.காரணம் ஈசனின் உயிர் நண்பர் சுந்தரர் பூமியில் பிறப்பெடுத்தது தமிழனாக. அதேபோல ஈசனது செல்வத்துக்கு அதிபதி குபேரன் பூமியில் அவதரித்ததும் தமிழனாக.இப்படி அவர்கள் இயற்றிய பதிகங்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடமாக வைத்து மனித வாழ்வின் மாண்பை சீர்படுத்தி இருக்கவேண்டும். அன்பு சமத்துவம் சகோதரத்துவம் வாழ்க்கை தத்துவம் அனைத்தும் மனிதகுலம் பெற்று சிறப்பான வாழ்வதனை வாழ்வாங்கு வாழ்ந்திருக்கும்.நாம் பட்டிணத்து அடிகள் போன்று வாழாவிட்டாலும் பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்பாமல் அவர்கள் மீது அன்பு காட்டி மனிதகுல மாண்பை போற்றி பாதுகாப்போமாக. நன்றி.பட்டிணத்து அடிகள் மலர்பாதம் போற்றி.எந்தை ஈசன் சேவடி போற்றி போற்றி.ஓம் நமசிவாய.

Comment here