சம்பவம்

பணமே பிரதானம் என்பதுதான் கொள்கையா?

Rate this post

குருநிந்தனை

சில விஷயங்களை ”சரிதான் போ” என எளிதில் கடந்துபோக முடியவில்லை. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவி என தன்னை ஒவ்வொருமுறையும் அறிமுகப் படுத்திக்கொள்ளும் தேசமங்கயர்க்கரசியின் பேச்சு.

கீழ்வரும் விஷயங்களைப் படித்துப்பார்த்துவிட்டு, தானே தனது மனசாட்சிப்படி முடிவு செய்துகொள்ளட்டும்.

ப்ளாஷ் பேக்: 1

ரம்ஜான் நோன்பு விழாவில் ஒரு முறை கருணாநிதி பேசுகின்றபோது, ‘முஸ்ஸீம்களாகிய நீங்கள் இருப்பது நோன்பு, இந்துக்கள் செய்வது வம்பு’ என்று பேசினார். முஸ்ஸீம் சமுதாயக் கூட்டத்தில் போய் இந்துக்களை இழிவுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் காலத்திலிருந்தே திமுக-வில் நிலவி வந்த போக்கு இது.

ப்ளாஷ் பேக் : 2

அதேபோல் இந்து மத பெரியோர் ஆன்மிகளாருமான செல்வாக்கு பெற்றுக்கொண்டிருந்த “கிருபானந்த வாரியாரை” அவர் தோற்றத்தை கொண்டு “கிருபானந்த லாரியார்” என கிண்டல் செய்து அழைத்தவர்கள்தான் இந்த திராவிட கழகத்தார்.

ப்ளாஷ் பேக் : 3

தமிழக முதல்வரக இருந்த சி.என். அண்ணாதுரைக்குப் புற்றுநோய் ஏற்பட்டது சிகிச்சைக்காக அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் வந்தனர். சிகிச்சைக்குப் பலனில்லை. அண்ணாதுரை இறந்துவிட்டார். (1969)
இந்த நேரத்தில் நெய்வேலி அருள் நெறித் திருக்கூட்டத்தாரின் அழைப்பை ஏற்று உரையாற்றிய திருமுருக கிருபானந்த வாரியார், ‘விதி வலிமையுடையது. ஊழை வெல்ல முடியாது,’ என்று குறிப்பிட்டார்.

அண்ணாதுரையின் மறைவால் தமிழ்நாட்டில் சோக அலை எழுந்தது. ‘வாரியார் அண்ணாவைத் தாக்கிப் பேசிவிட்டார்’ என்ற வதந்தி நெய்வேலியில் பரப்பப்பட்டது.
அதன் விளைவாக ஒரு ஆவேசக்கும்பல் வாரியார் இருந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டது, அந்த வீட்டைத் தாக்கியது. வாரியார் வழிபடும் விக்கிரகங்கள் வீசி எறியப்பட்டன. மயில் உடைந்தது.

ஆயிரக்கணக்கான மக்களைத் தன்னுடைய ஆளுமையால் கட்டிப் போடும் ஆற்றலுடையவர்; தங்குதடையில்லாமல் தமிழ் பேசும் முதியவர்; நெற்றியிலே திருநீறும், நெஞ்சினிலே கருணையும் அணிந்தவர்; வறியவருக்கும் திருப்பணிக்கும் வாரி வாரிக் கொடுத்தவர்; குறையொன்றுமில்லாத கொள்கை உடையவர் கிருபானந்த வாரியார். அந்தத் தமிழ் முனிவரைத் தாக்கிவிட்டார்கள் கழகத்தவர்கள்.

காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் வாரியார் அங்கிருந்து வெளியேறி வேறிடத்திற்குச் சென்றார்.

இதைக் கேள்விப்பட்ட ராஜாஜி மனம் வருந்தினார். சேங்காளிபுரம் அனந்தராம தீக்ஷிதர், வாரியாருக்குக் கடிதம் எழுதினார்.
முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார். கி. வா. ஜகன்னாதன், குமரி அனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல ஈ.வெ.ரா விடுதலையில் தலையங்கம் எழுதினார். ‘யோக்கியமற்ற கூப்பாடுகள்’ என்ற அந்தத் தலையங்கத்தில் வாரியாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார், தாக்குதலை நியாயப்படுத்தியிருந்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு வாரியாருக்கு ஒரு கடிதம் வந்தது. வாரியாரைத் தாக்க வந்தவராக தன்னைக் குறிப்பிட்டுக்கொண்ட ஒருவர், ‘மரணப் படுக்கையில் இருக்கிறேன். என்னை மன்னித்து, விபூதி கொடுக்க வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.அவருக்குப் பிரசாதம் அனுப்பிவைக்கப்பட்டது..

வாரியார் தாக்கப்பட்டது ஒரு முறையல்ல; பலமுறை. அண்ணாதுரை மறைவுக்கு முன்பும் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து வாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக்கேள்வி கேட்டு வம்பு செய்ததாக மு. கருணாநிதியே ‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆதாரம்: 2009 ஆகஸ்ட் 31, தமிழ் ஹிந்து இணையதளம்..

ப்ளாஷ் பேக் : 4

முஸ்லீம் மாநாட்டில் அன்று திரு.கருணாநிதி கூறியது, “இந்தியன் என்றால் ஒரளவு ஏற்றுக்கொள்ளலாம். அது என்ன இந்து? (கூட்டத்தில் பலத்த சிரிப்பு) இந்து என்றால் அரபு மொழியில் திருடன் என்று அர்த்தம்.”

ஆக, கர்ணகொடூரமாக பல்வேறு காலகட்டங்களில் தனது குருவை நிந்தனை செய்த தி.மு.கழகத்தின் மேடையிலேறியது மட்டுமின்றி, இந்துதர்மத்தை தனது இறுதிகாலம் வரையிலும் வசைபாடித் தூற்றிய கலக நாயகன் கருணாநிதியை பட்டினத்தடிகளுடனும், காரைக்கால் அம்மையாருடனும் மங்கையர்க்கரசி ஒப்பிட்டுப் பேசுகிறார் எனில், பணமே பிரதானம் என்பதுதான் கொள்கையா?

அவருக்கு அப்படியெனில், நமக்கு நம் கலாச்சார ரீதியான கொள்கை முக்கியம்.
இனியும் தேசமங்கையர்க்கரசி தன்னை கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவி எனும் தகுதியை இழந்துவிட்டார்.

இந்த நிமிடம் முதல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட காலம் வரையிலாவது அவரைப்புறக்கணிக்க வேண்டும்.

இந்த சமூக விலக்கு ஒன்றே தன்னுடைய தவறு என்ன என்பதை மங்கையர்க்கரசிக்கு உணர்த்தும்.

இப்படிச் செய்வது அவருக்கான படிப்பினை மட்டுமல்ல, சனாதனதர்மத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை கீழ்த்தரமாக வாய்கிழியப் பேசி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளும் மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாகும்.

Comment here