பண்டயப்பத்திரப்பதிவுகள்

Rate this post

இன்றையப் பத்திரப்பதிவில் பயன்படும் சொற்களில்
பலவும் ,அதன் முறைகளும் சோழர்காலத்தில் இருந்து பயன்பட்ட சொற்கள்
என்பது வியப்புக்குரியது .
பிரமாணம் விலைப்பிரமானம் , நிலவிலைப்பிரமானம் பூமிபிரமானம் ,
இ றைக்காவல் பிரமாணம் ,

ஆசிறி யப்பிரமானம் ,பிரியப்பிரமானம், சண்டேஸ்வரப்பிரமானம் போன்ற சொல்லாட்சிகள் நிறைய சோழர்க்கால கல்வெட்டுகளில் கிடைக்கிறது .

பல பண்டைய நீதி நூல்கள் ஆவணங்கள் எப்படி அமைய வேண்டும் என்று பட்டியலிடுகிறேன் .அவைகள் பத்திரங்கள் ,உபகதப்பாத்திரம் (இரசீது ஒப்புதல் சீட்டு ), கிரயப்பத்திரம் ( விலைகொடுத்து வாங்குவது )
ஆத்திப்பத்திரம் (அடமானம் )சந்திப்பத்திரம் ,( உடன்படிக்கை ),ஸ்திதி பத்திரம் ,நிலையான பத்திரம் ),
விபாகப்பத்திரம்( பாகப்பிரிவினை ) தானப்பத்திரம்
( கொடையாகக்கொடுப்பது )தாசப்பத்திரம் ( அடிமை ஒப்பந்தம் ) என்று வியாசர் ,பிரஜாபதி போன்ற வர்கள் வடமொழியில் சொல்லியிருக்கின்றனர் .

சோழர்கள் காலத்திலும் இத்தகைய முறைகள் பயன்பாட்டில் இருந்திருப்பது பல கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது .இரண்டுதரப்பினரிடம் ஏற்படும் பரிவர்த்தனைகள் , விற்பனை ,உடன்பாடுகள் ,ஊர், சபைஆகியவைகள் எடுத்த முடிவுகள் ,அளித்த சலுகைகள் , அரசு அளித்த ,ஆணைகள் ,சலுகைகள் , மற்றும் எப்போதும் தினசரி நடைபெறவேண்டிய தர்மங்கள் , நியதிகள் போன்றவை ஆவாங்களாகப்பதிவு செய்யப்பட்டது .

ஆவணங்களைப்பதிவு செய்துப்பாதுகாக்க நிலையான ஆவணக்களங்கள் அப்போதே இருந்தன .எனவே இத்தகையப்பத்திரப்பதிவு நமக்கு அந்நியர் அளித்த அறிவு என எண்ணவேண்டாம் .
அப்போது ஆவணங்கள் ஓலையிலோ ,கல்லிலோ ,அல்லது செம்பிலோ பதிந்து
ஆவணப்படுத்தப்பட்டது .மக்கள் இவைகள் உயிரினும் மேலாக மதித்தனர் .

தீட்டு என்பது எழுதப்பட்டது என்று பொருள்படும் .தீட்டியது தீட்டு .. கைத்தீட்டு ஒத்திசைவுத்தீட்டு ,நிலமைத்தீட்டு ,அடையாளைத்தீட்டு ,ஏவல்தீட்டு ,விலைப்பிரமணத்தீட்டு ,உபயத்தீட்டு , இசைவுத்தீட்டு என பல தீட்டுக்களைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றது .தீட்டு எழுதுதல் என்பது சம்பந்தப்பட்ட இருவர் ,அசைவையும் , விலை விபரத்தையும் எழுதிக்கொள்ளும் ஒப்பந்தம் ஆகும் .

ஆவணங்கள் எழுதிக்கொடுப்பவர்கள்” இது என் எழுத்து” அன்றுஎழுதி எழுதிய ஆவணத்தின் அடியில் கையெப்பம் இடுதல் சோழர் காலத்திலும் வழக்கமாக இருந்திருக்கிறது .

அவ்வாறே , எழுதிய ஆவணங்களில் சாட்சி விடுதலும் அப்போது வழக்கத்தில் இருந்திருக்கிறது .சாட்சி சொல்பவர்கள் இப்படி அறிவேன் ” என்று தமது பெயரை எழுதி பின்பு ஒப்[பமிட்டு , இது என் எழுத்து என்று முடிப்பது பழக்கத்தில் இருந்துள்ளது .

கையெழுத்துஇடத்தெரியாதவர்கள் , ஒரு கீறலை இடுவர் .அந்தகீறல் தற்குறி
எனப்பட்டது .இன்றளவும் எழுதத்தெரியாதவர்களை தற்குறி என்று குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது .

அந்தத் தற்குறி படிக்கத்தெரிந்த ஒருவரால் இப்போது போலவே அட்டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது .அதற்க்கு மாட்டறிதல் என்று அப்போது அறியப்பட்டிருக்கிறது .தர்க்குறியின் கீறலுக்கு கீழ்” தற்குறி மாட்டறிந்தோன் “என்று தமது பெயரை எழுதி ஒப்பமிடும் வழக்கம் சோழர்காலத்தில் இருந்திருக்கிறது .
இவ்வாறு பல்வேறு நடை முறைகள் பண்டைய காலத்திலேயே நமது பத்திரப்பதிவில் இருந்திருக்கின்றன .
தொடரும் ……

அண்ணாமலை சுகுமாரன்


படம் பண்டைய க்கல்வெட்டு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*