பிரத்யகம்பொது

பண மதிப்பு சரிவு : எதையும் சமாளிப்போம்; இந்திய பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை

 

இந்திய பங்குச்சந்தை, ரூபாயின் மதிப்பு சரிவு தொடர்ந்து பொருளாதார துறை அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அலர்ட் ஆகியுள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவுக்கு மக்கள் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரிட்டன் பவுண்ட் மதிப்பு பெரிதும் சரிந்தது. இதனால் உலக அளவில் அமெரிக்கா இந்தியா, ஜப்பான், பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இந்திய பண மதிப்பு, யூரோ , யென் மதிப்பு சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை ஆயிரம் புள்ளிகள் கீழ் நோக்கி சென்றன.
இதற்கிடையில் டில்லியில், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: தற்போதைய நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். தாழ்வு நிலையை சமாளித்து முன்னேறுவோம். எதையும் சந்திக்க அரசும், ரிசர்வ் வங்கியும் தயார் நிலையில் இருக்கிறோம் என்றார்.

Comment here