கல்வி

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் நேரடியாக + 2 தேர்வு எழுத முடியாது!

Rate this post

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் தனித்தேர்வர்களாக நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத முடியாது என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. மாணவர்களின் சுமையை குறைக்கும் விதமாக 1200 மதிப்பெண்கள் இருந்ததை 600 மதிப்பெண்களாக மாற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதாவது ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண்களாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் பதினோராம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் தனித்தேர்வர்களாக நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுத முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த பருவம் முதலே நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பழைய பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Comment here