Sliderபிரத்யகம்

பத்திரிகையாளர்களின் புரட்சியாளர் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் !

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிறந்து வளர்ந்து MA, BL, BEd படித்து சில மாதங்களே மட்டும் ஆசிரியராக பணியாற்றினார்.

தன்னுடைய பேராசிரியர் முப்பால்மணி அவர்களால் கம்யூனிச சிந்தனையால் ஈக்கப்பட்டு, ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, சென்னைக்கு வந்து ஜனசக்தி பத்திரிகையில் பணியாற்றினார்.

தோழர் எம்.கல்யாணசுந்தரம் அவர்களுடன் கட்சியின் முழு நேர ஊழியராகவும் பணியாற்றினார்.

இதனால் குடியாத்தத்தில் வங்கியில் வேலை செய்து வந்த தன்னுடைய மனைவி சசிகலாதேவி அவர்களையும் அந்த பணியை விட்டுவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் பணியாற்ற வைத்தார்.

நான்கு பிள்ளைகளை வைத்து இவர்கள் கஷ்டப் படுவதால் ரவீந்திரதாஸ் அவர்களின் பெற்றோர்கள் இரண்டு பிள்ளகளை தங்களுடன் வளர்த்தார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் இருவரும் பணியாற்றினார்கள்.

தொடர்ந்து தாமரை இதழிலும் பணியாற்றினார் ரவீந்திரதாஸ்.

அடுத்து தீக்கதிர், தமிழன் எக்ஸ்பிரஸ், விஜய் டிவி, தமிழன் தொலைக்காட்சி, வின் தொலைக்காட்சி போன்ற பல தளங்களில் பணியாற்றினார்.

திரைப்பட ஆய்வு கட்டுரைகள், விமர்சனங்கள், அரசியல் பார்வை கொண்ட கட்டுரைகள், சம்மந்தப்பட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டவர் ரவீந்திரதாஸ்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்த சமயம் இந்து ராம் கைது செய்வதை கண்டித்து எம்.ஜி.ஆரிடம் முறையிட்ட போது, ” உங்களுக்கு என்று ஒரு அமைப்பு இல்லையா ” என்று கேட்டதன் விளைவே, தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் ஒருங்கிணைத்து, ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய சூழல் ரவீந்திரதாஸ் அவர்களுக்கு ஏற்பட்டது.

இதன் தொடர் போராட்டத்தில் 1990 ஆம் ஆண்டு தமிழகத்தின் மாநிலம் தழுவிய முதல் பத்திரிகையாளர் சங்கம் என்று போற்றப்படும் ” தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ” என்ற அமைப்பை சில உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கினார்.

அது மிகப்பெரிய அளவில் உயர்ந்து, தமிழகம் முழுவதும் 3000 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக உருவானது.

அரசு மூலம் பத்திரிகையாளர்களின் குடும்பம் நல நிதி, உதவித் தொகை போன்ற பல சலுகைகளை பெற்றுத் தந்த முதல் தலைவர் ரவீந்திரதாஸ் அவர்களே.

இடதுசாரி சிந்தனையாளர் என்பதால் அவருடைய போராட்டங்களும், செயல்களுக்கு உழைக்கும் பத்திரிகையாளர்களின் உரிமை குரலாக ஒலித்தது.

இன்று பல அமைப்புகள் இருந்தாலும், தோழர் ரவீந்திரதாஸ் அவர்களே இதற்கான முன்னோடியாக விளங்குகிறார்.

உடல்நிலை பற்றி கவலைப்படாமல், 2012 ஆம் ஆண்டு வரை பத்திரிகையாளர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார் ரவீந்திரதாஸ்.

இன்றுவரை சொந்த வீடு கூட இல்லாமல் வாழும் அவருடைய குடும்பம் என்பது அனைவரும் பாராட்டப்பட்ட வேண்டிய ஒன்று.

22 ஆண்டுகளாக நடத்திவந்த சங்கம், சில குள்ள நரிகளின் சூழ்ச்சியால் அபகரிப்பு செய்யும் நிலையில் அதை காப்பாற்றி நிலை நிருத்த அவருடைய மூத்த மகன் சுபாஷை தலைவராக கொண்டுவர நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

அந்த நேரம் திரைப்பட துறையில் எடிட்டராகவும், பாக்யா இதழில் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார் சுபாஷ்.

தலைவர் பொருப்பை ஏற்க மறுத்த சுபாஷ் அவர்களை ஊக்குவித்து சம்மதிக்க வைத்தவர் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் ஐயா மாயாண்டி பாரதி அவர்கள்.

இதனால் மதுரையில் தேர்தல் மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சுபாஷ் 22 ஆண்டுகளாக இயங்கிவந்த சங்கத்தை கடத்த ஐந்து ஆண்டுகளாக பல போராட்டங்களுக்கு நடுவே, ரவீந்திரதாஸ் வழியில் சிறப்பாக நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் 28 ஆண்டுகளாக மாநில அளவில் மிகப்பெரிய ஒரு சங்கமாக இந்த சங்கம் விளங்கி வருகிறது.

இந்த சங்கம் புது தில்லியில் உள்ள அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்டது.

அதில் அகில இந்திய துணைத் தலைவராக விளங்கினார் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ்.

தற்போது அகில இந்திய சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் டி.எஸ்.ஆர்.சுபாஷ்.

ரவீந்திரதாஸ் மறைந்து ஐந்து ஆண்டுகள் கடந்தாலும் பத்திரிகையாளர்களின் புரட்சியாளராக அவர் என்றுமே விளங்குவார்.

அவர் நினைத்து இருந்தால் ஆசிரியர் பணியில் தன் பணியை தொடர்ந்து இருக்கலாம், வழக்கறிஞராக விளங்கி இருக்கலாம்.

அல்லது திரைப்பட துறையில் பெரிய கதாசிரியராக வலம் வந்து இருக்கலாம்.

ஆனால் அவர் ஒரு பத்திரிகையாளராகவே இருக்க விரும்பியுள்ளார்.

அவர்களுக்கு என்று ஒரு அமைப்பை உருவாக்கி அதில் வெற்றியும் கொண்டவர் இவர்.

அவருடைய 73 வது பிறந்தநாளின் அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

– ஆவல் கணேசன்
பொதுச் செயலாளர்
தமிழர் தேசிய முன்னணி

Comment here