அரசியல்

பத்திரிகையாளர்கள் தெருநாய் என்ற அதிமுக ஹரிபிரபாகரன் இருந்து நீக்கம்!

பத்திரிக்கையாளர்கள் பிஸ்கட்டுக்காக குரைக்கும் தெருநாய் என சர்ச்சைக்குரிய வகையில் டிவிட் செய்த அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் ஹரிபிரபாகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி சென்றார். நேற்று மருத்துவமனை சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜாவை பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி கேட்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால், ஓபிஎஸ் வருகையின் போது பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் ஹரிபிரபாகரன், “துணை முதல்வர் சந்திப்பின் போது மருத்துவமனைக்குள் செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி கிடையாது.  பிஸ்கட்டுக்காக குரைக்கும் தெருநாய்களை உள்ளே அனுமதிப்பதை காட்டிலும் கேட்டில் கட்டிப்போடுவது சரியே” என டிவிட் செய்தார்.
இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக தலைமைக் கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Hari Prabhakaran

@Hariadmk

All opinions expressed by me are personal and it is not official party view. I’m not authorised to express party views. I heard few people got hurt due to one of my tweet this morning .I don’t have any animosity towards any group of people. My apologies to those who r hurt.

இதனிடையே சர்ச்சைக்குரிய அந்த டிவிட்டை டெலிட் செய்த ஹரிபிரபாகரன்,  டிவிட்டரில் பதிவிட்டது என் தனிப்பட்ட கருத்து, அது யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என பதிவு செய்துள்ளார்.

Comment here