இல்லறம்

பத்து நாடிகள் என்பவை இடா ,பிங்களா .சுழிமுனை…

 

அதிகாரம் 4 = நாடி தாரணை
35) ஆதித்தன் தன கதிர் போல அந்தநாடிகள்
பேதித்துத் தாம் பரந்தவாறு

ஆதித்தன் தன கதிர்களை நீக்கமற இந்த அகிலம் எங்கும்
பரப்புவது போல நாடிகளும் , பிராணன் எனும் உயிராற்றலை நமது உடலெங்கும் பரப்பி செயல்படுகிறது என்கிறார் . சூரியன் மையமாக நின்று ,தன கதிர்களால் கோள்கள் அனைத்தையும் இயக்குவது போல , உடலின் உயிர் ஆற்றல் நாடிகளில் தச நாடிகள் மற்றும் 72,000 நாடிகள் வழியே பரவி உடலின் அத்தனை உறுப்புக்களையும் இயக்குகிறது .

அண்டத்தில் இருப்பதே இந்த பிண்டத்திலும் இருக்கிறது .
அண்டம் இயங்குவது போலவே இந்த பிண்டமும் இயங்குகிறது .

நாடிகளை பற்றி யூகிமுனிவர் ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளாரஅதை பார்போம்…
சிறந்த இடை பிங்கலையும் சுழினையோடு
சிறப்பான காந்தாரி யத்திச் சிங்கூவையாம்
பிறந்த அலம் பூரூடனொடு குகுதன்றானூம்
பேரான சங்கினியும் வயிரவன்றான்
திறந்தவிவை பத்துந்தான் நாடியாகும்
திரிமூன்று நாளையினி லொடுங்கும்பாரு

பத்து நாடிகள் என்பவை இடா ,பிங்களா .சுழிமுனை… என்பவற்றோடுகாந்தாரி,அத்தி..சிங்கவை,அலம்புருடன்.. குகுதன்,சங்கினி,வயிரவன்…என பத்து நாடிகளாம்..
இதில்இடா ,பிங்களா .சுழிமுனை… இவை மூன்றும் …வாதத்தில் ஒடுங்கும் இயல்புடையவையாகும்.ீ. .

இடா …பிங்கலை…என்ற இரண்டு நாடிகளூம் உடம்பில் அடிபபாகமாகிய மூலத்திலிருந்துகிளம்பி….
சுழிமுனையோடு.. கூடி ஏறி சிரசு வரை சென்று முட்டி,அவை உகார வளைவில் திரும்பி,வரும் வழி நாசி,நடுப்புருவம் ,நெற்றி…ஆகிய இடங்களை தொட்டுக்கொண்டுமீண்டும் மூலத்தில் சேருகின்றது….
அடுத்துகந்தாரி என்ற நாடி உந்தி கமலத்தில் இருந்து கிளம்பி நரம்புகள் ஏழுக்கும் உருவமாகி மேலே சென்று சிரசில் மூட்டி மீண்டும் கண்டத்தில் புகுந்து நாவின் அடியில் வந்த அமர்ந்து விடுக்கின்றது
அடுத்து அத்தி சிங்குவை..
இரண்டும் மூலத்தின் மேற்பகுதியில் இருந்து கிளம்பி மேலே ஏறி இரண்டு செவிகளில் உள்ள காதுகளை தொட்டுக்கொண்டு..நரம்புகளில் எல்லாம் துடிப்புகளை உண்டாக்கிக் இரண்டு கண்களில் வந்து நிற்க்கும.
அடுத்து அலம்புருடன்,வயிரவனும் என்ற இரண்டு நாடிகளும் அடிமூலம் பற்றி மேலே ஏறி இரண்டுகன்னங்களிலும் வந்து நிற்க்கும்.
அடுத்து..சங்கினியும்குரு என்ற நாடிகள் நாபித் தளத்தில் தோன்றி குதம் வரையில்ஓடிக்கொண்டுயிருக்கும்..
இத்தனை செய்திகள் நாடிகளைப்பற்றி இருந்தும் நாம் இன்னும் முழுமையும் உணரவில்லை தெரிந்துகொள்ள பல வழியிருந்தும் நாம் தெரிந்துக்கொள்ள முயற்சிக்க வில்லை.பல நூற்று கக்காண சித்தர்கள் நூல்கள் இருந்தும் நாம் அதனை படிக்கமுற்படவில்லை.ஒருவேளைஅவைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாலும் ,பாமரத்தமிழில் ,மறைபொருள் அதிகம் கொண்டு இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் ..
மனித உடலானது தொண்ணூற்றிஆறுதத்துவங்களால் ஆனது அதில் தசநாடிகளும் அடங்கியது . அது பற்றி திருமூலர் பின்வருமாறு உரைக்கிறார்.

“பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்

ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை

ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு

ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே——

இந்த தொண்ணூற்றி ஆறு தத்துவங்களை அறிந்து, தெளிந்து கொள்வதே சித்தர்களின்ஞானத்தின் அடிப்படையாகிறது

நமது ஔவைப் பிராட்டி அத்தனை ஞானத்தின் அடிப்படைச் செய்திகளையும் சுருக்கமாக இரண்டடியில் விளக்கியுள்ளார் .இந்த பத்துநாடிகளும் மனித உடம்பில் உள்ள ஆறுஆதாரங்களையும், மனதையும், உயிரையும்இயக்குகிறது என்பது சித்தர்களின்முடிவாகும்

அடுத்த செய்தியை அடுத்தப்பதிவில் காணலாம் .

அண்ணாமலை சுகுமாரன்

12/10/17

Comment here