அரசியல்இந்தியாபொதுவிளையாட்டு

பத்மஸ்ரீ விருதை போராடி பெறுகிறார் பஜ்ரங்

ஆசிய காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் தொடர் போராட்டம் காரணமாக பத்மஸ்ரீ விருதை பெற உள்ளார்.

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நடப்பாண்டில் நடந்த காமன்வெல்த் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார். இவருக்கு, விளையாட்டின் உயரிய கேல் ரத்னா விருது கிடைக்கும் என நம்பப்பட்டது. ஆனால், மத்திய அரசின் எந்த விருதும் கிடைக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முயற்சி செய்தார். இதனிடையே, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ரத்தோவை திடிரென சந்தித்தார். அப்போது, இந்தியாவின் சிறந்த குடிமகன்களுக்கு வழங்கப்படும் நான்காவது, உயரிய பத்மஸ்ரீ விருது வழங்க முடிவு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு நடப்பாண்டின் பத்மஸ்ரீ விருதுக்கு பஜ்ரங் பெயரை நேரடியாக பரிந்துரைத்துள்ளது. இதேபோல், காமன்வெல்த் ஆசிய விளையாட்டு மல்யுத்தத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் பெயரும் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Comment here