வேளாண்மை

பனைமரம்

 

இயற்கை நமக்கு தந்த கொடைகளில் பனைமரமும் ஒன்றாகும். பனைமரம், தென்னைமரம்,அடி முதல் நுனி வரை நமக்கு பயன் தரக்கூடியதாகும். பனைமரத்திலிருந்து பனைஓலை, பனைவிசிறி,குருத்தோலை,குருதோலையிலிருந்து வித விதமான வண்ணங்களிலிருந்து எண்ணற்ற பொருட்கள் தயாரிக்கின்றனர்.விதவிதமான கூடைகள், தொப்பிகள், கின்னிபெட்டிகள் குழந்தைகள் விளையாடும் பல விதமான வில்லையட்டு பொம்மைகள் தயாரிக்கின்றனர். பனைமரங்களில்ருந்து பதனீ, பனங்காய், பனம்பழம், பனங்கொட்டை,பனங்கிழங்கு நுங்கு, பதநீரிலிருந்து கருப்பட்டி, பனங்கற்கண்டு உட்பட பல்வேறு பொருட்கள் தயார் செய்யபடுகின்றன.பனைஒலைகலிருந்து பல்வேறு பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. பனைஒலைகள் மூலம் அக்காலத்தில் வீட்டின் கூரைகள் அமைத்துக் கொண்டனர். பனைஒலைககளை பதப்படுத்தி அவற்றில் அந்த காலத்தில் பேப்பருக்கு பதிலாக பயன்படுத்தி  வந்தனர்.நன்கு வளர்ந்த பனைமரத்தை துண்டுகளாக்கி (சென்ரிங்) தளம் அமைக்க பயன்படுத்துகின்றனர். கடல் ஓரங்களில் அதிக அளவில் பனைமரங்கள் வளர்க்கப்படுகிறது. இவை கடல் அரிப்பை தடுக்ககூடியதாகவும் உள்ளதால்  பல கடற்பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்க பனை மர  தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த காலங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் பனந்தோப்புகள் அமைந்திருந்தன ஒவோவ்று நிலப்பகுதிய்ளும் வரப்பு ஓரங்களில் பனைமரங்கள்  கட்டாயம் இருக்கும். பனைமரத்தின் பயனை ஆண்டுதோறும் அனுபவிக்கும் நாம் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு நமக்கு பலன் தரும் பனைமரம் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வருகிறது.

Comment here