தொழில்நுட்பம்

பன்முக செயல்பாடுகள் கொண்ட சார்ஜர்

இதை உணர்ந்தே பன்முக செயல்தன்மை கொண்ட கருவிகள் மின்னணு துறையில் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் லுமி நிறுவனம் பன்முக செயல்பாடுகள் கொண்ட சார்ஜரை வெளியிட்டுள்ளது. இந்த சார்ஜர் எல்.இ.டி. விளக்கு கொண்டது. இதை மேஜை மீது வைத்து விளக்காக பயன்படுத்த முடியும். இந்த விளக்கின் ஒளி அளவைக் குறைக்க தொடு திரை வசதி உள்ளது. ஒளியை அதிக பிரகாசமாகவும், குறைந்த ஒளி அளவாகவும் இதை கொண்டு மாற்றலாம். அத்துடன் மஞ்சள், வெள்ளை நிறங்களிலும் இதன் ஒளியை மாற்றிக் கொள்ளலாம். இதில் யு.எஸ்.பி. போர்ட் உள்ளதால் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். படுக்கை அறையில் இதை இரவு நேர விளக்காகவும் (நைட் லேம்ப்) பயன்படுத்தலாம்.

இதில் காலண்டர் உள்ளதால் தேதி, நேரம் காட்டும். அத்துடன் பொருள் அசைவு உணர் கருவி (மோஷன் சென்சார்) உள்ளது. போனின் கீழ் பகுதியில் நேரடியாக ஒரு போனை சார்ஜ் செய்ய முடிவதோடு இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் உள்ளது. அதன் மூலம் உங்கள் கேமரா, டேப்லெட் அல்லது லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்.
படுக்கும் போது புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஒளி பரவும். அறையின் வெப்ப நிலையைக் காட்டும், அலாரம் வசதியும் கொண்டது. வீடு மட்டுமின்றி அலுவலகங்களிலும் இதை பயன்படுத்தலாம். இதன் விலை 110 டாலராகும். அமேசான் இணையதளம் மூலம் இதை ஆர்டர் செய்யலாம். இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் உரிமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இதன் விலை ரூ.7,500.

Comment here