சம்பவம்

பயங்கரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை ராணுவம் வேட்டையாடியது. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி காரின் உரிமையாளர் சஜ்ஜத் பட் என்பது தெரியவந்தது. விசாரணையில் இவரும் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தது தெரியவந்தது.

நேற்று ஆனந்த்நாக்கில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை ராணுவம் மேற்கொண்டது. இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் சஜ்ஜத் பட் என்பது தெரியவந்துள்ளது. என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் நிறைந்த கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Comment here