Sliderஇயல்தமிழ்

பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை 

சோழ வரலாற்றின் மிகப்பெரிய மூன்று மன்னர்களின் அரசவையில் தலமைப் புலவராக ,ராஜ குருவாக விளங்கிய ஒட்டக்கூத்தரின் குருபூஜை வருடாவருடம் அவரின் .பள்ளிப்படைக் கோயிலில் நடைபெறுவதாக நண்பர் ஒருவர் கூறினார் .

எனக்கு ஒட்டக்கூத்தரைப்பற்றி இன்னமும் ஆழமாக அறிய ஆவல் பிறந்தது .இத்தனை செல்வாக்கோடும் அரசர்களின் ஆதரவும் இருந்தும் ஒட்டக்கூத்தருக்கு கம்பருக்கு கிடைத்த பிரசித்தம் ஏனோ கிடைக்கவில்லை .
விக்கிரம சோழன் ,இரண்டாம் குலோத்துங்கன் ,இரண்டாம் ராஜராஜன் போன்ற மூன்று மன்னர்களிஅரசவையை ஒட்டக்கூத்தர்அலங்கரித்திருக்கிறார் ..இந்த மாதிரி அரிய வாய்ப்பு வரலாற்றில் வேறு யாருக்கும் கிடைத்துள்ளதாகத் தெரியவில்லை .

இம்மூன்று மன்னர்களின் அவையை அலங்கரித்த ஒட்டக்கூத்தர் பல நூல்களை இயற்றியிருக்கலாம் .ஆனால் நமக்கு அறியக் கிடைப்பவை தக்காயப்பரணி ,கலிங்கத்துப்பரணி போன்ற சில மட்டுமே .
.
குலோத்துங்க சோழ மன்னனின் அவைப் புலவராக இருந்தஇவரால் பாடப்பட்ட தக்காய பரணி என்ற நூலின் சிறப்பையும் இவரது கவிபாடும் ஆற்றலைக் கண்ட குலோத்துங்க சோழன், ஒரு ஊரையே பரிசாகக் கொடுத்தார். அப்படி பரிசாக வழங்கப்பட்ட ஊர்தான் கூத்தனூர் என அழைக்கப்படுகிறது.
இந்த கூத்தனூரில் குடிகொண்டுள்ள அன்னை சரஸ்வதி தேவியின் அதீத அன்பைப் பெற்ற புலவர் ஒட்டக்கூத்தர். பரணி நூல் பாட சரஸ்வதி தேவி உதவி புரிந்ததாக கூறப்படுகிறது.

சிவனை அவமதித்து தக்கன் நடத்தும் யாகததிற்குச் சென்ற தேவர்கள்
மீதும் தக்கனின் மீதும் சிவனுக்குக் கடும் கோபம்.மூண்டது
தக்கனுக்கும் தேவர்களுக்கும் பாடம் புகட்ட நினைத்த சிவன், வீரபத்திரர் என்ற தனது விசேட படைத் தள பதியை தோற்றுவித்து அனுப்பினார்.
தக்கனின் ஆணவத்தையும் யாகத்தையும் அழித்த வீர செயலை விவரிப்பதே தக்காய பரணி .
பரணி இலக்கியத்தில் முதல் பரணியாக தக்காய பரணி இலக்கிய வரலாற்றில் கூறப்பட்டிருந்தாலும் , செயங் கொண்டாரின் கலிங்கத்துப் பரணியே நூலின் சிறப்பாலும் ,அதன் எளிமையாலும் பலராலும் வெகுவாக அறியப்பட்டுள்ளது .
முதல் குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகரத்தொண்டை மான் வடகலிங்க மன்னன் அனந்த வர்மனை வென்ற வீர திறனைக் கூறுவது கலிங்கத்துப் பரணி .
ஆனால் பலராலும் அறியப்படாத முதல் கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் பரணிதான் .
அந்த பரணி அந்தக்காலத்தில் இருந்ததற்கு சில இலக்கிய சான்றுகள் கிடைத்துள்ளன .ஆனால் அந்தக்கலிங்கத்துப்பரணிஇதுவ்ரைக்கிடைக்கவில்லை .

ஒட்டக்கூத்தர் எழுதிய கலிங்கத்துப்பரணி கூறுவது வேறு ஒரு யுத்தத்தைப்பற்றி .கருணாகரனின் வெற்றியைப்பற்றி அல்ல .
,
முதல் குலோத்துங்கன் காலத்தில் குலோத்துங்கனின் மகன் விக்கிரமன் தனது தந்தையின் சார்பில் வேங்கியை நிர்வகித்து வந்தான் .அந்த சமயத்தில் விக்கிரமன் தென் கலிங்கா வீமனை போரில் வென்றதை விவரிப்பதே ஒட்டக்கூத்தரின் முதல் கலிங்கத்துப்பரணி.

தென் கலிங்கத்தை விக்கிரம சோழன் வென்றதை விவரிப்பது ஒட்டக்கூத்தரின்முதல் கலிங்கத்துப்பரணி.,
வட கலிங்கத்தை கருணாகரத்தொண்டை மான் வென்ற வீர திறனைக் கூறுவது செயங்கொண்டாரின் இரண்டாவது கலிங்கத்துப் பரணி

தஞ்சை – குடந்தை சாலையில், குடந்தை நகருக்கு ஒரு கி.மீக்கு முன்னதாகவே, அரிசிலாற்றங்கரையில் அமைந்திருக்கிறது தாராசுரம்.

அழியாத மூன்று சோழர் பெருங்கோயில்கள் என போற்றப்படும் மூன்று சோழர் கோயில்களுள் ஒன்றான ஐராவதீஸ்வரர் கோயில் இங்கு தான் உள்ளது. இக்கோயிலுக்குப் பின்பக்கம் இருக்கும் வீரபத்ரர் கோயிலில் தான் ஒட்டக்கூத்தருக்கு பள்ளிப்படை அமைக்கப்பட்டுள்ளது .
ஒட்டக்கூத்தர் தாராசுரம் வீரபத்திர சுவாமியை நோக்கி தக்கயாக பரணி பாடியுள்ளார். மேலும், இக்கோயிலின் பின்புறத்தில் சமாதி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.,நமபசப்படுகிறது .
இங்கு ஒட்டக்கூத்தருக்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது.
சோழர் காலத்தில் பள்ளிப்படையும், வீரபத்திரர் ஆலயமும் கற்றளியாக இருந்து பின்னாளில் திருப்பணிகளுக்கு இலக்காகியுள்ளன என்பதை கோபுரம் மற்றும் பிற பகுதிகளில் காணப்பெறும் சோழர் கால கல்வெட்டுகளின் உடைந்த பகுதிகள் வாயிலாக உறுதி செய்யமுடிகிறது.

கருவறையில் நின்ற கோலத்தில் வாள், கேடயம், வில், அம்பு ஆகியவற்றை நான்கு கரங்களிலும் பிடித்த நிலையில் வீரபத்திரர் திருமேனி காணப்படுகின்றது. சிதிலமான நிலையில் ராஜகோபுரம் உள்ளது. நந்தி மண்டபம், முகமண்டபத்துடன் கூடிய கருவறை, கருவறையின் பின்புறம் ஒட்டக்கூத்தர் சமாதி ஆகியவை காணப்படுகின்றன. சமாதிக்கோவில் சுற்றுச்சுவர் எதுவுமின்றி திறந்த வெளியில் இருக்கிறது.

ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படைதிருச்சுற்று மண்டபத்தின் மேற்குப் பகுதியில் வீரபத்திரரின் கருவறைக்குப் பின்புறம் காணப்படுகின்றது. சமாதியின் மேல் ஒரு சிறிய லிங்கம் காணப்படுகிறது

இரண்டாம் இராஜராஜன் தனது ராஜகுருவாக இருந்த ஒட்டக்கூத்தரின் மீது மிகுந்த அன்பும் ,மரியாதையும் கொண்டிருந்ததால் , வீர புத்திரருக்கு சிறந்த கோயில் அமைத்ததும் ,தனது அரசவை தலைமை புலவர் மறைவுக்குப்பின் அந்தக்கோயிலிலேயே அவருக்கு சமாதியும் அமைத்தார் .

தனது குருவின் மேல் கொண்ட பற்றின் காரணமாக இரண்டாம் இராஜராஜன் தனது மறைவுக்கு பின் ஒட்டக்கூத்தரின் சமாதி அருகில்தனக்கும் ஒரு பள்ளிப்படை அமைத்துக்கொண்டார் போலும் .
அந்தக்கோயில் வளாகத்தில் பழங்கால செங்கல் மேடை ஒன்று காணப்படுகிறது .அது இரண்டாம் இராஜராஜனின் பள்ளிப்படை எனக் கருதப்படுகிறது .
இவ்வாறு பரணி பாடி ஒரு ஊரேயே தனது பெயரால் பெற்றதும் , அவரின் வழிபடுதெய்வத்திற்கு அவருக்காக ஒரு கோயில் கட்டிக்கொடுக்கப்பட்டதும் ,அவரது மறைவுக்கு பின் அவரின் சமாதி அங்கேயே அமைந்ததும் , அவரது சமாதிக்கு அருகிலேயே தனது பள்ளிப்படையை அமைத்து கொண்ட மன்னன் என இத்தனை சிறப்புடன்
தமிழ் புலவர்கள் வரலாற்றில் வாழ்திருப்பதுதமிழ்புலவர்கள் அப்போதைய காலத்தில் பெற்றிருந்த பீடும் ,பெருமையும் தெரிவிக்கிறது .

ஆனால் தற்போது ,அப்போது அத்தனை செல்வாக்காக இருந்த புலவர் அத்தனை புகழோடு இல்லாது இருப்பதுவிந்தையாகும்
,புகழ் ப்பெறுவதற்கும் பெரும் பேறு செய்திருக்கவேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது .
அண்ணாமலை சுகுமாரன்

Comment here