பரணி பார்க் கல்விக் குழுமத்தில் அறிவியல் திருவிழா

Rate this post

 

பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மாணவர்களின்  அறிவியல் ஆர்வத்தை வெளிக்கொணரவும், அவர்களின் குழு உணர்வு, அறிவியல் சிந்தனை மேம்படும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இரண்டு நாட்கள் நடைபெறும் அறிவியல் திருவிழாவின் முதல் நாளான நேற்று (22.11.18)  ஆறு முதல் பதினோறாம் வகுப்பு வரை உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கான அறிவியல் மாநாடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை வகித்தும், பரணி பார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தும் மாநாட்டினை துவக்கி வைத்தனர். இதில் பரணி பார்க் மற்றும் பரணி வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 1620 இளம் விஞ்ஞானிகள் 445 ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

நிறைவு நாளான இன்று கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இவ்விழாவில் கரூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.M.கும்மராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் பரணி பார்க் மற்றும் பரணி வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 1928 மாணவர்கள் கலந்து கொண்டு 435 அறிவியல் படைப்புகளை சமர்ப்பித்தனர்.

இவ்விழாவில் பரணி பார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர்  முனைவர் C.ராமசுப்பிரமணியன் பேசுகையில் “மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய நிகழ்வுகளில் பள்ளி அளவில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், குழந்தை விஞ்ஞானிகள் அறிவியல் ஆராய்ச்சிக்கூடங்களையும், அவற்றின் சிறப்புகளையும், செயல்பாடுகளையும் புரிந்து கொள்வதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

விழா ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாக அலுவலர் M.சுரேஷ், முதல்வர்கள், துணை முதல்வர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை கண்டு வியந்து பாராட்டினர்.

புகைப்படம்: அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிடுகிறார் கரூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.M.கும்மராஜா அவர்கள், அருகில் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் தாளாளர் S.மோகனரெங்கன், பரணி பார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர்  முனைவர் C.ராமசுப்பிரமணியன் ஆகியோர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*