இத்தாலியில் 100 மருத்துவர்களுக்கும் மேல் இறந்துள்ளனர். குமுகத்தைக் காக்க தன்னுயிர் ஈந்த பேரீகியர் இவர்கள். மருத்துவர்களோடு எவ்வளவோ மருத்துவ உதவியாளர்களும் பணியாளர்களும் இறந்துள்ளனர். எவ்வளவு பெரிய இழப்பு இது என்று சிந்தித்துப்பாருங்கள்.
சப்பானில் புக்குசீமா அணுவுலை தீநேர்ச்சியின் போது பெரும் நெஞ்சுரத்துடன் 50 பேர் முன்வந்து அணுவுலை கட்டுப்பாட்டுக்கு உதவியதைப் போல மருத்துவர்களின் நெஞ்சுரமும் கடமையுணர்வு நினைந்து நினைந்து போற்றத்தகக்து.
இவர்கள் உயிருடன் இருந்திருந்தால் எத்தனையோ உயிர்களைக் காத்திருப்பார்களே!
நாளையே கூட உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100,000 பேரைத் தாண்டலாம். விரைவில் அமெரிக்காவே உலகில் அதிகம் பேரை இழந்த முன்னணி நாடாக இருக்கவுள்ளது.
(இது அமெரிக்காவின் அரசியல் தலைமையின்
மன்னிக்க முடியாத குற்றம். வளர்ந்த நாடா அமெரிக்கா?!)
அமெரிக்காவில் கொள்ளைநோய்க்கு நடுவுலையாக உள்ள நியூயார்க்கு மாநிலத்தில் இன்றும் (ஏப்பிரல் 9, 2020) கூட 1724 பேர் இறந்திருந்தாலும். புதிதாக நோயால் தாக்கப்பட்டு மருத்துவ மனைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை உயர்வது நின்றுள்ளது என்பதும் உச்சியை அடைந்து தட்டை நிலையை எட்டியிருப்பதுபோல் தெரிவதும் பெரும் நம்பிக்கை அளிக்கின்றது. இது சரிந்து கீழே வரத்தொடங்கினால் இறப்பவர் எண்ணிக்கையும் பெரிதும் குறையும்.
இன்னும் நோய் இருப்பு நிலையைச் செய்தேர்வு செய்து காண்பதில் பெரும் தட்டுப்பாடு உள்ளது. இது மாற வேண்டும்.
நியூயார்க்கின் முள்தொற்றி நோய்ப் பரவலின் நிலையைக் காட்டும் வரைபடம் சிறிது நம்பிக்கை அளிக்கின்றது.
Comment here