மாவட்டம்

பள்ளி மாணவ மாணவியர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி  சுங்குவார்சத்திரம் பகுதியில் பள்ளி மாணவ மாணவியர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொன் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் சுங்குவார்சத்திரம் பஜார் வீதி பகுதியில் வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கச் செய்யும் வகையில் விழிப்புணர்வு  பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
பஜார் வீதியில் சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில்  ஏந்தியவாறு சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
 சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
மேலும் பஜார் வீதியில் உள்ள கடைகளுக்கு மாணவ மாணவிகள் ஆசிரியர்களுடன்  நேரடியாகச் சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
பள்ளி மாணவ மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Comment here