பழைய பெங்களூர் பகுதியைச் சேர்ந்த இடங்களிலிருந்து ஏறக்குறைய 150 கல்வெட்டுகள்

Rate this post
                   பழைய பெங்களூர் பகுதியைச் சேர்ந்த இடங்களிலிருந்து ஏறக்குறைய 150 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் ‘கர்நாடக கல்வெட்டுகள்’ என்னும் தலைப்பில் பி.எல். ரைஸ் என்பவரால் தொகுக்கப்பட்டு 12 தொகுதிகளாக புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தகைய கல்வெட்டுகளின் மூலம் மொழியின் பன்முகத்தன்மை, கட்டுமானங்கள், வரி விதிப்புமுறைகள் பற்றிய ஏராளமான வரலாற்றுச் செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நகரமயமாக்கல், கல்வெட்டுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது, பொறுப்பின்மை காரணமாக பெரும்பான்மையான கல்வெட்டுகள் தொடர்ந்து அழிந்து வருகின்றன. தொடர்ந்து சிதிலமடையாமல், அவற்றை அழிவிலிருந்து காப்பது அரசாங்கம் மட்டுமல்ல பொதுமக்களின்  கடைமையும் கூட.  
 
பெங்களூர் பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளை பாதுகாப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த பணிகளில் ஏராளமான தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தியிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்ப கருவிகளான் சோஷியல் மீடியா, 3 டி ஸகேனிங், ஒசிஆர் போன்றவற்றைப் பயன்படுததி கல்வெட்டுகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விஷயங்களில் சமீப காலங்களில் ஏராளமான முன்னேற்றங்களை கொண்டு வர முடிந்திருக்கிறது. இத்தகைய முயற்சிகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து ’பெங்களுர் கல்வெட்டுகள்’ (Facebook: https://www.facebook.com/groups/inscriptionstones & Twitter: @inscriptionblr) குழுமத்தைச் சேர்ந்த உதயகுமார்  பேச இருக்கிறார்.
 
பேச்சாளர் பற்றி
 
பெங்களூரைச் சேர்ந்த உதயகுமார், கலை ஆர்வலர். கலைச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு திட்டங்களில் பங்கெடுததிருக்கிறார். சென்னை ஐஐடியில் இயந்திரவியல் படித்தவர், ஏராளமான பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிந்திருக்கிறார். தற்போது பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் தயாரிப்பு தலைமை நிர்வாகியாக பணிபுரிகிறார்.   


Attachments area

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*