பாகிஸ்தானில் வரும் ஜூலை 25ஆம் தேதி பொதுத்தேர்தல்: யாருக்கு வாய்ப்பு?

Rate this post

சர்வதே பயங்கரவாதிகளின் கூடாரமான பாகிஸ்தானில் வரும் ஜூலை 25ஆம் தேதி பொதுத்தேர்தல் நடத்த அந்நாட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அந் நாட்டின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி நாசிர் உல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசின் ஆட்சிக் காலமானது வரும் மே 31தேதியன்று முடிவடைகிறது. ஜீலை 25 இல் பொதுத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதியான நாசிர் உல் முல்க் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய தலைமையிலான இடைக்கால அரசு பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பதவியில் நீடிக்கும்.முல்க் பாகிஸ்தானின் இடைக்கால தேர்தல் ஆணையராக பணியாற்றியவர். தற்போது நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால அரசு புதிய அரசு அமைக்கப்பபடும்வரை எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது.

இதனிடையே இந்த பொதுத்தேர்தலை அரசியல் கட்சிகள் 3 அணிகளாக இணைந்து எதிர்கொள்வார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது. நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஒரு அணியாக போட்டியிடுகிறது. மனைவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது கூட வழக்கு தவறாமல் ஆஜர் ஆனவர் நவாஸ் ஷெரிப். அவர் பிரதமராக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பதவியை விட்டு விலகினார். இது பொதுமக்களின் பரிவையும் இரக்கத்தையும் அவரது கட்சியினருக்கு சம்பாதித்து தந்துள்ளது.

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இம்ரான் கான். அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி நவாஸ் ஷெரிப் இல்லாத காரணத்தினால் அவரது முஸ்லீம் லீக் கட்சி உற்சாகம் குறைந்த நிலையில் உள்ளது. இது இம்ரான் கானுக்கு உற்சாகமளிக்கிறது. நாங்கள்தான் ஆட்சி அமைக்க போகிறோம் என வெளிப்படையாகவே இம்ரான் கான் அறிவித்திருக்கிறார்.

மறைந்த பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆசீப் அலி சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக தற்போது இருக்கிறார். அவர் 3வது அணிக்கு தலைமை வகிக்கிறார்.

இந்த 3 அமைப்புகளை தவிர முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் தேர்தலில் குதிக்க தயாராகி வருகிறார். தீவிரவாதம் பேசுகிற அமைப்புகள் அவர் பக்கம் இணைந்து நிற்கின்றன. ராணுவமும் அவருக்கு ஆதரவாக உள்ளது. எனவே அவர் ஒரு பெரும் சக்தியாக தேர்தலின் போது தோன்ற வாய்ப்புகள் உள்ளது.

பாகிஸ்தானில் முஸ்லீம்கள் தவிர சிறுபான்மையினரும் கணிசமாக உள்ளனர். முஸ்லீம் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். கடந்த 2013ல் சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது முஸ்லீம் அல்லாத வாக்குகளின் எண்ணிக்கை 27 லட்சம் மட்டுமே இருந்தது.

முஸ்லீம் அல்லாத வாக்குகளில் முதல் இடத்தில் வருவது இந்துகளின் வாக்குகளாகும். பாகிஸ்தானில் மிகப் பெரிய சிறுபான்மை அமைப்பாக இந்துகள் உள்ளனர். 2013ஆம் ஆண்டு இந்துகளின் வாக்கு 14 லட்சமாக இருந்தது. 2018-ல் 17 லட்சமாக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் மொத்த வாக்குகள் 10.5 கோடி. இவர்களில் 5.9 கோடி ஆண்கள். 4.67 கோடி பெண்கள்.

பாகிஸ்தானில் முஸ்லீம் அல்லாத வாக்குகளில் இரண்டாவது இடத்தில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை 16.4 லட்சம். இந்துகளுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் இருப்பதாக கூற முடியாது. மற்ற அமைப்பினர் எல்லாம் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்துகள் சிந்து மாகாணத்தில் இரண்டு மாவட்டங்களில் 40 சதவீதத்துக்கு அதிகமான எண்ணிகையில் உள்ளனர். எனவே எந்த தொகுதியிலும் வெற்றியை நிர்ணயிக்க கூடிய பலம் முஸ்லீம் அல்லாத வகுப்புகளை சேர்ந்தவர்களின் வாக்குகளுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*