தமிழகம்

பாக்கெட்டில் இருந்த செல்போன் – திடீரென வெடித்து சிதறியதில் இளைஞர் படுகாயம்

Rate this post

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த கொண்டக்குப்பம் பகுதி சேர்ந்தவர் முத்து (22). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், அவரது உறவினர்கள் விடுமுறை நாட்களில் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்ப கொண்டக்குப்பம் பகுதியிலிருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு அவர்களது உறவினரை அழைத்து வந்து ரயில் ஏற்றியுள்ளார்.

வெடித்து சிதறிய செல்போன்

பிறகு மீண்டும் செட்டித்தாங்கல் வழியாக கொண்டக்குப்பம் பகுதியை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்தது. (narzo 50A android mobile)

இதில் தொடை பகுதியில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, முத்து வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment here