இந்தியா

பாபநாசம்

நெல்லை மாவட்டத்தின் சுற்றுலா தலமான அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். கோடை காலமான தற்போது தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பள்ளிக்கூட விடுமுறை, மே தின விடுமுறை நேற்று என்பதால் அகஸ்தியர் அருவிக்கு காலையிலேயே சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர்.
இதனால் அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் அங்கு வந்த வனத்துறையினர் திடீரென சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்தனர். இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், மாவட்டத்தின் பல்வேறு பயன்பாட்டிற்கு தண்ணீர் தேவைப்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் பாபநாசம் கீழ் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட சம்பந்தப்பட்ட துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி தண்ணீர் திறக்கப்படுகிறது என்றனர்.
இதையடுத்து சிறிது நேரத்தில் அகஸ்தியர் அருவியில் கூடுதலாக தண்ணீர் வந்ததால், வெள்ளமென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி தக்க சமயத்தில் வனத்துறையினர் வந்து முன்னறிவிப்பு செய்தது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Comment here