கதை

பாரதியார்- தத்துவ சிந்தனைகள் ஆய்வு

Rate this post

பாரதியைப்பிடிப்பதற்கு எத்தனையோ காரணங்களில் அவரின் தத்துவ ஆய்வு அதன் தாக்கம்
அதில் தொனிக்கும் ஏக்கம் என்னை எப்போதும் கவர்ந்து வரும் முக்கியக் காரணியாக அமையும் .

பலப்பாடல்களில் அவரின் தத்துவ ஏக்கம் வெளிப்படும் .அதில்; முக்கியமாக நான் கருதுவது கீழ் கண்ட பாடல் முக்கியமானது .

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,
நீங்களெல்லாம்சொற்பனந் தானா?-
பல தோற்ற மயக்கங்களோ?

ஆதிகிசங்கரரின் அத்வைத மாயாவாதத்தின் தேடல் அதில் ஒலிக்கும் அழகு யாரையும் கவரும் ஒரு விடயம் ஆகும் அடுத்த வரி இன்னமும் அழகு

நிற்பது நடப்பது பறப்பது எல்லாம் பரிணாம படிநிலைகள் .இவைகள் எல்லாம் கனவுதானோ என்கிறார் .

கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

கற்பதுவும் கேட்பதுவும் , பின் அதுகுறித்து கருதுவதும் அடுத்த படிநிலை ஆகும்

.வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?

அடுத்து எங்கும் காணும் காட்சிகளை விவரிக்கிறார் .
அவைகளை காட்சிப் பிழைதானோ? என கேள்வி எழுப்புகிறார் .

போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?

காட்சி , கோலம் ஞாலம் எனும் படிநிலைகளைக்கேள்விக்கு உட்படுத்துகிறார் .

சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?

காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

காட்சி கோலம் ஞாலம் என்று புலன்களால் தன்னை சூழ அறிந்ததை அத்தனையும் மாயைதானோ என்று கேள்வி எழுப்பியவர் ,அவைகளை
வெறுங் காட்சிப் பிழைதானோ?தோற்ற மயக்கங்களோ? என்று வினவிய அவரே இறுதியில் புலன்கள் தவிர்த்த அவைகள் நித்தியமே என்கிறார் .

பாரதிபாடல் என்றாலே புரட்சி, தேசீயம், விடுதலை, பெண்ணுரிமை என்றே அடையாளப்படுத்தப்படும் கருத்தியல் நம்மிடம் காணப்படுகிறது.

ஆனால் பாரதியின் படைப்புக்களில் அவரது ஆழ்ந்த தத்துவ தரிசனமும் தென்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ‘

பாரதியின் இந்த அத்வைத தத்துவப் பற்று அவனது ‘காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்னும் வரி தெளிவுபடுத்துகிறது.

முத்து மாரி யிடம் மனம் வெளுக்க என்ன உண்டு ? என்று கேட்க்கும் ஏக்கத்திலும் வெளிப்படுகிறது .நிற்பதுவே நடப்பதுவே..’ என்னும் இப்பாடல் ஆழ்ந்த பொருளுடைய தத்துவப் பாடல் ஆகும் எனக்குப்பிடித்தப்பாடல் ஆகும்
இன்னமும் ஆழ்ந்த பொருள் கொண்ட பாடல் இது .
இன்னமும் சரியாகப்போற்றப்படாதப்பாடல் இது !
-அண்ணாமலை சுகுமாரன்

Comment here