சினிமா

பாரதியார் படத்திற்கு பிறகு சாயாஜி கதையின் நாயகனாக அகோரி என்ற படத்தில் நடிக்கிறார்!

Rate this post

மராத்தி நடிகர் சாயாஜி ஷிண்டே. தமிழில் வெளிவந்த பாரதி படத்தில் பாரதியாராக நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு அவர் தென்னிந்திய மொழிகளில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். பாரதியார் படத்திற்கு பிறகு சாயாஜி மீண்டும் கதையின் நாயகனாக அகோரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆர்.பி.பிலிம்ஸ் ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே.மேனனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். புதுமுக இயக்குனர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்குகிறார். தெலுங்கில் சஹா படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் கூறியதாவது:சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை, இது ஒரு முழுமையான எண்டர்டெய்ன்ட் படம்.

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும். சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

மற்றும் இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகள் படமாகியுள்ளன. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. என்றார்.

Comment here