உலகம்

பிணச் சீரமைப்பின் வகைகள் யாவை?

நாளங்கள் வழியாகச் செய்யப்படும் எம்பாமிங், வேதிப் பொருட்களை உள்ளே செலுத்துவதில் ஒருவகையாகும். இவை, உள்ளே போகும் அதே நேரம்… உள்ளிருக்கும் ரத்தம் உள்ளிட்ட திரவங்களை வெளியேற்றும். சீரமைப்புச் செய்வதற்கு முன் இறந்த உடலை மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் திரவம் சீராகப் பரவும்.

பற்களின் கேவிட்டிக்கள் வழியாகச் சீரமைப்பு செய்வது மற்றொரு வகை. இதன்மூலம், தொப்புளின் வழியாக திரவம் செலுத்தப்பட்டு… நெஞ்சகம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தேவையற்ற திரவங்களை வெளியேற்றி, உள்ளே வேறு ஒரு திரவத்தை நிரப்புவதாகும்.
மேல்சரும எம்பாமிங் முறையில் உடல் சீரமைப்பு ஒழுங்காய் நடைபெறாத பகுதிகளில் மட்டும் ஊசி கொண்டு எம்பாமிங் செய்யப்படும்.

மொத்தமாக மேலோட்டமாகச் செய்யப்படும் எம்பாமிங் முறையில், தோல் மக்கிப் போகாதவாறு இருக்க மட்டும் கெமிக்கல் செலுத்தப்படும்.

நீண்டநாட்கள் பதப்படுத்த வேண்டும் என்கிற நிலையில்… உடலில் பல இடங்களில் ஊசி போட வேண்டும்.

மொத்தத்தில் எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு முறையில், பல்வேறு ரசாயனம் மற்றும் உப்புகள் கொண்டு சீரமைப்பு செய்யப்படுவதால் உடலின் நிறம் பாதுகாக்கப்படும். பிணத்தின் கை, கால் பகுதிகளை நாம் நினைத்தது மாதிரி மாற்ற முடியும். உடலில் ஏற்கெனவே தங்கி இருக்கும் மருந்துகளால் உண்டாகும் தேவையற்ற துர்நாற்றத்தை அது கட்டுப்படுத்த உதவும்.

Comment here