ஆன்மிகம்

பிதிர் பூஜை

இது ஒன்னும் அமாவாசை தர்ப்பணம் இல்லை. தெய்வமாகி
போன நம் முன்னோர்களை தேடிபிடித்து வணங்குவது.

நீத்தார் உலகம் என்று சொல்லக்கூடிய இடத்தில் நம் மூன்று
தலைமுறையை சேர்ந்த முன்னோர்கள் இருப்பார்களாம்.

வருடத்தில் ஒரு நாள் மட்டும் வெளியே வருவதற்கு
அனுமதி உண்டு.

அது திதி நாள். அன்று அவர்களுக்கு உரிய திதி கடமைகளை
சரிவர செய்தால் மகிழ்ந்து வாழ்த்திவிட்டு செல்வார்களாம்.

ஒன்றுமே செய்யவில்லை என்றால், வந்தவர்கள் நல்ல
மனது உள்ளவராக இருந்தால் மனக்குறையோடும், கெட்ட
மனது உள்ளவராக இருந்தால் சபித்து விட்டும்
போய்விடுவார்களாம்.

அது போன்ற குறைகள் இருந்தால் அவற்றை நீக்கி அவர்கள்
ஆசியை பெறுவதற்காக செய்யப்படுவது பிதிர்பூஜை.

இதுவும் பெரும்பாலான ஹோமத்தில் தவிர்க்க படுகிறது.
இது முறையல்ல.

 

Comment here