பிரம்மஞானம்

Rate this post

 

1) பிரம்ம ஞானம் என்றால் என்ன ?
மிகப் பெரியதாக எங்கும் வியாபித்துள்ள அந்த ஒன்றை பற்றிய அறிவு ஆகும்.

2) பிரம்மம் என்றால் என்ன ?
மிகப் பெரியது என்பது ஆகும்

3) சமாதி என்பது என்ன ?
இருமைகளுக்கு ஆட்படாமல் மனம் சமமான ஸ்திதியில்
இருப்பது சமாதி .

4 சகஜ சாமதி என்பது என்ன ?
உடல் இயங்கி மனம் ஒய்வில் இருப்பது சகஜசமாதி .

5) நிர்விகல்ப சமாதி என்பது என்ன ?
உடலும் மனமும் ஒய்வில் இருப்பது நிர்விகல்ப சமாதி .

6) ஞானமடைய எவ்வளவு காலம் ஆகும் ?
நொடிப்பொழுதே போதும்.

7) ஞானம் அடைவதற்கு துறவறம் அவசியமா ?
இல்லை.

8) ஞானம் அடைவதற்கு இல்லறம் தடையா ?
இல்லை

9) ஞானம் அடைவதற்கு குரு
அவசியமா ?
அவசியமே

10) ஞானமடைதலின் குருவின்
பங்கு என்ன ?
குரு நம்மிடம் இல்லாததை (நான்) எடுத்து விட்டு ,
நம்மிடம் இருப்பதை (உண்மையை) கொடுக்கிறார்.

11) விழிப்புணர்வு என்றால் என்ன ?
நிஜநிலையை மறக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்வு என்று பெயர்.

12) ஞானம் என்றால் என்ன ?
எந்த அறிவை பெறுவதன் மூலம் மனது அமைதி அடைகிறதோ அதுவே ஞானம் ஆகும்.

13) தியானம் என்பது என்ன ?
பிரபஞ்சம் அல்லது இறைவனோடு இணைந்து இருப்பது தியானம் ஆகும்.

14) தியானம் எப்படி செய்ய வேண்டும்.
உடல் செயல்படும் பொழுது மனம் அந்த செயலிலேயே ஒன்றியிருக்க வேண்டும்.

உடல் செயல்படாமல் இருக்கும் பொழுது மனம் செயலற்று இருக்க வேண்டும்.

15) நாம ஜெபம் எப்படி செய்ய வேண்டும் ?
உடல் இறை நாமத்தை ஜெபிக்கும் பொழுது மனம் தெய்வ உருவத்தையோ வேறு எந்த காட்சியையோ சிந்திக்காமல் ஜெபிக்கும் செயலிலேயே ஒன்றியிருக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*