அரசியல்உலகம்

பிரிட்டன் படிப்பு செலவு குறையும் ; இந்தியாவுக்கு பல சாதக சூழல்

பிரி்ட்டனில் இருந்து இறக்குமதியாகும் பொருள் விலை குறையும் சாதக நிலை உருவாகியிருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவுக்கு மக்கள் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரிட்டன் பவுண்ட் மதிப்பு பெரிதும் சரிந்தது. இதனால் உலக அளவில் அமெரிக்கா இந்தியா, ஜப்பான், பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இந்நிலையில் பிரிட்டன் பண மதிப்பு சரிந்தததில் இந்தியாவுக்கு பல சாதக சூழல்கள் ஏற்பட்டுள்ளது.

* பிரிட்னிடல் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் அனைத்து பொருளின் விலையும் குறையும்.

* இந்தியாவில் இருந்து பிரிட்டன் சென்று படிக்கும் படிப்பு செலவும் குறையும்.

* இரு நாட்டு வர்த்தக பிரிவுகளில் இந்தியாவுக்கு செலவு குறையும்.

* லண்டனில் சொத்து விலைக்கு குறைந்த விலை கொடுத்தால் போதும்.

* பிரிட்டன் செல்லும் செலவு குறையும்

* பிரிட்டன் செல்லும் மாணவர்கள் வாங்கும் கடனை குறைத்து வாங்கினால் போதுமானதாக இருக்கும்.

Comment here