சினிமா

பிரியா ஆனந்த் மதம் மாறினாரா?

Rate this post

பிரியா ஆனந்த் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘எல்.கே.ஜி.’ படம் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். அடுத்து விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இவர் தற்போது ரமலான் நோன்பு இருப்பதாக ஒரு தகவல் பரவியது. அது உண்மையா? என்று அவரிடமே கேட்கப்பட்டது. அதற்கு பிரியா ஆனந்த், ‘‘நான் மதம் மாறவில்லை. எனக்கு எம்மதமும் சம்மதம். கோவிலுக்கும் போவேன். சர்ச்சுக்கும் போவேன். தர்காவுக்கும் செல்வேன். ரமலான் நோன்பு இருப்பது மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கிறது’’ என்று பதில் அளித்தார்.

Comment here